அக்னி 3 ஏவுகணை சோதனை வெற்றி
புவனேஸ்வர்: ஒடிசாவின் சந்த்பூரில் இந்தியா அக்னி 3 ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது.
ஒடிசாவின் சந்திப்பூர் தளத்தில் நடந்த இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணை 'அக்னி-3', வெற்றிகரமாக சோதனை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அணு ஆயுதங்களை ஏந்திக்கொண்டு 3,500 கிலோமீட்டர் தொலைவுக்கு சென்று தாக்கும் திறன் கொண்டது இந்த ஏவுகணை.
அக்னி-3 ஏவுகணை அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக்கூடியது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஆகும். இது 3,000 முதல் 3,500 கி.மீ. க்கும் அதிகமான தூரத்தில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டது. அக்னி 3 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது. இது இந்திய பாதுகாப்பு படையினருக்கு கூடுதல் வலிமை சேர்த்துள்ளது.
இந்த ஏவுகணை மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை சார்பில் தயாரிக்கப்படுகிறது. திட எரிபொருளை கொண்டு இயக்கப்படுவதாகும். உலகின் அதிவேகமான ஏவுகணைகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஹா ............
மாண்பு மிகு எ பி ஜே அய்யா அவர்களின் வெற்றி
மறைந்த பிறகும் ஏவுகணை சோதனையில் வெற்றி அடைந்து கொண்டே இருப்பது அரிதிலும் அரிது .....
வாழ்த்துகள்
தூக்கம் தொலைப்பார்கள் எதிரிகள். மோடிஜி தலைமையில் நாட்டின் அதிவேகமான முன்னேற்றமானது இந்தியாவின் பெருமைக்கு இன்னோர் மகுடம். அணைத்து விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துக்கள் வந்தனங்கள்
வாழ்த்துக்கள்மேலும்
-
இது நடந்தால்... திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்: சொல்கிறார் திருமா!
-
சைக்கிளில் அமைதி பயணம்
-
பிப்ரவரி 17ல் தாக்கல் ஆகிறது தமிழக இடைக்கால பட்ஜெட்
-
வரும் 5 மாநில தேர்தலிலும் தேஜ கூட்டணி வெற்றி பெறும்: எல்.முருகன் திட்டவட்டம்
-
அதிகாலை பயணத்தால் விபரீதம்; பஸ் மீது லாரி மோதியதில் 6 பேர் பலி
-
அமெரிக்கா வெளியிட்ட இந்திய வரைபடம்: பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி