அறுவடைக்கு தயாராகும் 'காலே கஜார்' ; தோட்டக்கலை துறை தீவிர முயற்சி
குன்னுார்: குன்னுார் சிம்ஸ் பூங்கா நர்சரியில், முதல் முறையாக விதைக்கப்பட்ட, 'காலே கஜார்' எனப்படும் கருப்பு கேரட் நன்கு பராமரிக்கப்பட்டு செழித்து வளர்ந்துள்ளது.
குன்னுார் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர்களின் நாற்றுக்கள் இங்குள்ள நர்சரியில் தயார் செய்யப்படுகிறது. இங்கு கடந்த நவ., மாதம், அரசு தோட்டக்கலைத் துறை சார்பில், டில்லியில் இருந்து வரவழைக்கப்பட்ட கருப்பு கேரட் விதைகள் விதைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
உத்திர பிரதேசம், ஹரியானா, பீகார், பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளில் 'காலே கஜார்' என, அழைக்க படும் இந்த கருப்பு கேரட் உற்ப த்தி இருந்தாலும், இங்கு முதல் முறையாக, உற்பத்தி செய்யபடுகிறது.
பூங்கா மேலாளர் லட்சுமணன் கூறுகையில், ''சோதனை முயற்சியாக கருப்பு கேரட் விதைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது நன்றாக வளர்ந்துள்ளது. வரும் மார்ச், 15க்கு பிறகு, அறு வடை செய்யப்படும்,'' என்றார்.
மேலும்
-
பாகிஸ்தானுக்கு தொடரும் பதிலடி; செனாப் நதி நீர் மின் திட்டத்துக்கு டெண்டர் கோரியது இந்தியா!
-
ஐந்து ஆண்டுகளில் முதல்வர் ஸ்டாலின் செயல்பாடு முட்டை தான்: நயினார் நாகேந்திரன்
-
கூட்டணி பேச குழு அமைத்தும் தி.மு.க., தாமதப்படுத்துகிறது: காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் தாக்கு
-
சாவர்க்கருக்கு பாரத ரத்னா கேட்கும் மோகன் பாகவத்; சாவர்க்கரின் பேரன் வரவேற்பு
-
எந்த முறைகேட்டை மறைக்க தேர்வு ரத்து: விஜய் கேள்வி
-
அலங்கோல திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நேரம் நெருங்கி விட்டது; சொல்கிறார் எல்.முருகன்