அமெரிக்காவின் முயற்சிக்கு முட்டுக்கட்டை; கிரீன்லாந்தில் பிரான்ஸ், கனடா தூதரகம் திறப்பு
நுாக்: கிரீன்லாந்தை ஆக்கிரமிக்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு எதிராக கனடாவும், பிரான்சும் அங்கு துணை துாதரகங்களை திறந்துள்ளன.
ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் தன்னாட்சி பிரதேசம் கிரீன்லாந்து. இங்கு அரிய கனிமங்கள் உள்ளிட்ட வளங்கள் நிறைந்து உள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விரும்புகிறார்.
இதற்கு டென்மார்க் மற்றும் ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், நேட்டோ கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகள் கிரீன்லாந்தில் துணை துாதரகங்களை திறந்துள்ளன.
தலைநகரான நுாக் நகரில் இந்த துாதரகங்கள் திறக்கப்பட்டுள்ளன. கனடா, 2024ம் ஆண்டிலேயே கிரீன்லாந்தில் துணைத் துாதரகம் திறக்க திட்டமிட்டிருந்தது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கடந்த ஜூன் மாதம் அங்கு சென்றபோது இதை அறிவித்திருந்தார். அப்போது டிரம்பின் திட்டங்களுக்கு எதிர்ப்பையும் வெளிப் படுத்தினார்.
இதற்கு முன் அங்கு ஐஸ்லாந்து மற்றும் அமெரிக்கா மட்டுமே துாதரகங்களை கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்மேலும்
-
அவசர கதியில் மாரியம்மன் கோவில் கும்-பாபிேஷகம் சேலம் பா.ஜ., நிர்வாகி பரபரப்பு புகார்
-
விவேகானந்தா பள்ளி மாணவர்கள் ரோபோடிக் போட்டியில் சிறப்பிடம்
-
வார்லி ஓவியம் வரைந்து சாதனை ஆசிரியர், மாணவர்களுக்கு விருது
-
பி.ஜி.,-டி.ஆர்.பி., போட்டித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கவுன்சிலிங்
-
அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்கள் விடிய விடிய காத்திருப்பு போராட்டம்
-
விபத்தில் மின் கம்பம் சேதம் இரவு முழுவதும் மின்தடை