குப்பையில் சின்டெக்ஸ் தொட்டி மக்கள் கடும் அவதி
கரூர்: கரூர் அருகே, சின்டெக்ஸ் தொட்டி குப்பைக்கு இடையில் உள்ளதால், தண்ணீர் பிடிக்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
கரூர் மாநகராட்சி, பெரிய குளத்துப்பாளையம் பழைய இனாம் கரூர் நகராட்சி அலுவலகம் அருகே, 350க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அந்த பகுதியில் வசித்து வருவோர் வசதிக்காக, மாநகராட்சி சார்பில், சின்டெக்ஸ் தொட்டி கட்டி, குடிநீர் குழாய் போடப்பட்டது. மேலும், போர்வெல் அமைக்கப்பட்டு, மின் மோட்டாரும் பொருத்தப்பட்டது.
இந்நிலையில், தொட்டியை சுற்றி குப்பை குவிந்துள்ளது. மின் மோட்டாரை இயக்க, அமைக்கப்பட்ட சுவிட்ச் போர்டுகளும் சேதமடைந்துள்ளது. இதனால், தண்ணீர் பிடிக்க முடியாமல் தவிக்கின்றனர். எனவே, சின்டெக்ஸ் தொட்டியை சுற்றியுள்ள குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சைக்கிளில் அமைதி பயணம்
-
பிப்ரவரி 17ல் தாக்கல் ஆகிறது தமிழக இடைக்கால பட்ஜெட்
-
வரும் 5 மாநில தேர்தலிலும் தேஜ கூட்டணி வெற்றி பெறும்: எல்.முருகன் திட்டவட்டம்
-
அதிகாலை பயணத்தால் விபரீதம்; பஸ் மீது லாரி மோதியதில் 6 பேர் பலி
-
அமெரிக்கா வெளியிட்ட இந்திய வரைபடம்: பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி
-
தங்கம், வெள்ளி விலை உயர்வு; சவரனுக்கு 1,360 ரூபாய் அதிகரிப்பு
Advertisement
Advertisement