அலங்கோல திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நேரம் நெருங்கி விட்டது; சொல்கிறார் எல்.முருகன்
சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வை ரத்து செய்து, அரசு பணியில் சேரும் தமிழக இளைஞர்களின் கனவை கலைத்த, அலங்கோல திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நேரம் நெருங்கி விட்டது என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை; டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு இன்று நடைபெறவிருந்த நிலையில் திமுக அரசின் நிர்வாக குளறுபடிகளால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடைசி நேரத்தில் தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்கள் மாற்றப்பட்டதாகவும், சில தேர்வு மையங்களில் தேர்வர்களின் எண் இடம்பெறவில்லை என புகார் எழுந்துள்ளது.
சில இடங்களில் வினாத்தாள் வரவில்லை. பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்ட காரணத்தினால், தேர்வர்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனால் குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. திமுக அரசின் அலட்சியத்தால் தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றி தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களை அலைக்கழித்து, தவிக்க வைத்துள்ள டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்திற்கு எனது கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசு பணியிடங்களுக்கான தேர்வைக் கூட நடத்த முடியாத லட்சணத்தில் தான் டிஎன்பிஎஸ்சி நிர்வாகமும், போலி திராவிட மாடல் திமுக அரசும் இருக்கிறது. திமுக அரசின் அலங்கோல ஆட்சியை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது இந்த நிகழ்வு. அரசு பணியில் சேரும் தமிழக இளைஞர்களின் கனவை கலைத்து, பணம் பறித்து, லஞ்ச லாவண்யத்தில் திளைக்கும் திமுக மன்னர் குடும்பமும், திமுக அமைச்சர்களும் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை குவித்துக் கொண்டு இருக்கிறார்கள். தமிழக இளைஞர்கள் வேலையின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த அலங்கோல ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நேரம் நெருங்கி விட்டது. வரும் சட்டசபைத் தேர்தலில் போலி திராவிட மாடல் திமுக அரசுக்கு தமிழக மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
முருகன் அவேர்களே நீங்கள் உங்கள் துறையை திறம்பட செயல்பட வைக்க வேண்டும்.
2).
சமீபத்தில் தமிழ்நாடு கூட்டுறவுத்துறையில் பணியமர்த்த நடந்த தேர்வுகளிலும் சில இணை மற்றும் துணை பதிவாளர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்று புகார்கள் எழுந்துள்ளன.
தமிழர்கள் இந்த திருட்டு திராவிட கூட்டத்தை அடித்து விரட்ட எப்போதோ தயாராகிவிட்டார்...
ஹலோ என்ன கனவா
ஹலோ ஆகூர் இருநூறு வந்ததா
வெறும் மேடை பேச்சு மட்டும் தான். மறைமுகமாக தொடர்பு உண்டு. எத்தனை ஊழல்வாதிகளை காப்பாற்றினார்கள். இவர்கள் வாக்களித்த மக்களை ஏமாற்றுகிறார்கள். கூவச்சாக்கடை அரசியல்.மேலும்
-
சனிக்கிழமை பத்திரப்பதிவுக்கு ரூ.1000 சிறப்பு கட்டணம் ரத்தாகுமா?
-
காஷ்மீர் அரசை விமர்சித்த பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கு ஆளும் கட்சியும் பாராட்டு
-
இது அமெரிக்காவா; பாகிஸ்தானா: டிரம்ப் கட்சி எம்.பி.,க்கு வந்த சந்தேகம்
-
உள்ளாட்சியில் 20 சதவீதம் தருவதாக ஏமாற்றிவிட்டனர்: தி.மு.க., மீது பழிசுமத்தி காங். மாவட்ட தலைவர் பேச்சு
-
ஜப்பானில் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுகிறார் சனே தகாய்ச்சி
-
உலக கோப்பை வாய்ப்பு எப்படி: சிராஜ் நெகிழ்ச்சி