த.வெ.க., கூட்டத்தில் பாதுகாப்பு பணி 2 போலீசாரிடம் சி.பி.ஐ., விசாரணை
கரூர்: கரூர் அருகே நடந்த, த.வெ.க., பிரசார கூட் டத்தில், பாதுகாப்பு பணியில் இருந்த, இரண்டு போலீசாரிடம் நேற்று, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப், 27 இரவு த.வெ.க., பிரசார கூட்டம் நடந்தது. அதில், கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை, உச்சநீதிமன்ற உத்தரவின்படி சி.பி.ஐ., - எஸ்.பி., பிரவீன் குமார் தலைமையிலான அதிகாரிகள் கடந்த அக்., 16 முதல் விசாரித்து வருகின்றனர். வரும், 12க்குள் குற்றப்பத்திரிகையை, சி.பி.ஐ., அதிகாரிகள் திருச்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதனால், கரூர் வேலுச்சாமி
புரத்தில் த.வெ.க., பிரசார கூட்டம் நடந்த இடத்தில், பாதுகாப்பு பணியில் இருந்து, போலீசாரிடம் நாள்தோறும் விசாரணை நடந்து வருகிறது.
கரூர் சி.பி.ஐ., அலுவலகத்தில், நேற்று காலை முதல் மதியம் வரை, த.வெ.க., கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த, இரண்டு போலீசாரிடம் விசாரணை நடந்தது.
மேலும்
-
அதிகாலை பயணத்தால் விபரீதம்; பஸ் மீது லாரி மோதியதில் 6 பேர் பலி
-
அமெரிக்கா வெளியிட்ட இந்திய வரைபடம்: பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி
-
தங்கம், வெள்ளி விலை உயர்வு; சவரனுக்கு 1,360 ரூபாய் அதிகரிப்பு
-
கும்பாபிஷேக விழா முகூர்த்த கால் நடுதல்
-
தை வெள்ளியை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம்
-
தார்ச்சாலை அமைக்க தாமதம் விபத்தில் சிக்கும் ஓட்டுனர்கள்