காங்கிரசை கூட்டணியில் சேர்க்கலாமா; சீமானிடம் ஆலோசித்த விஜய்
சென்னை: காங்கிரசை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாமா என்று நடிகர் விஜய் தம்மிடம் கேட்டதாகவும், அதற்கு தாம் அளித்த பதில் என்ன என்றும் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் வெளியிட்டு உள்ளார்.
சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;
காங்கிரசை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாமா என்று தம்பி (நடிகர் விஜய்யை குறிப்பிடுகிறார்) என்னிடம் கேட்டார். அப்போது காங்கிரசை சேர்த்துக் கொண்டு என்ன அரசியல் பேசுவது என்று நான் கேட்டேன். அவர் அதை கவனித்தார்.
கச்சத்தீவு என்று பேசுவீர்களா? காவிரி நதிநீர் உரிமை என்று பேசுவீர்களா? இல்லை... மீத்தேன், ஈத்தேன் என நிலவளத்தை சுரண்டுகிறது என்று பேசுவீர்களா? கல்வி மாநில உரிமை, அதை எடுத்துக் கொண்டு போனது எப்படி என்று பேசுவீர்களா? சரக்கு மற்றும் சேவை வரி கொண்டு வந்தது யார்?
நீட் தேர்வை திணித்தது யார்? நமது மாநில உரிமைகளை எல்லாம் பறித்துக் கொண்டு போனார்கள். அந்த உரிமைகளை எடுத்துக் கொண்டு போனது யார்?
ஒரு தேசிய இனம் தமது விடுதலைக்கு போராடியது. அந்த விடுதலையை அழித்து நாசம் ஆக்கியது யார்? கட்சி யார்? அந்த அதிகாரம் யார்? அந்த (காங்கிரசை குறிப்பிடுகிறார்) கட்சியை சேர்த்துக் கொண்டு எந்த அரசியலை பேசுவது?
ஹிந்தி திணிப்பா? ஹிந்தி எதிர்ப்பா? ஹிந்தியை திணித்த மகான் யார்? எல்லாம் அவர்கள் (காங்கிரஸ்) தான். இப்போது பாஜ என்ன மதவாதமா? அப்படி என்றால் மிதவாதமா காங்கிரஸ்? பாபர் மசூதியை இடித்தது யார்? இடிக்க அனுமதித்தது யார்? காங்கிரஸ்... அப்போ என்ன பேசுவது?
கொலை செய்பவனை விட, அவன் குத்துவதற்கு என்னை பிடித்துக் கொண்டு நின்றான் பாரு... அவன்தான் பெருங்கொடுங்கோலன். விடுதலை பெற்ற இந்தியாவை அரை நூற்றாண்டு காலம் ஆண்ட கட்சி. இந்த நாடு மீள முடியாத ஏழ்மை, வறுமையிலும், ஊழல், லஞ்சத்திலும் ஊறி திளைக்கிறது அதற்கு காரணம் யார்?
196 லட்சம் கோடி ரூபாய் கடனை தொடுகிறது. இதற்கு யார் பொறுப்பேற்கணும். கடன் வளர்ச்சியே ஒரு நாட்டின் வளர்ச்சி, ஜிடிபி ஏறுகிறது.... எங்கே ஏறுகிறது. நாட்டின் வளர்ச்சி என்று கடன் வளர்ச்சியை நீங்கள் கட்டமைக்கிறீர்கள்.
தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்று எல்லாவற்றையும் தனியாருக்கு தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு இந்த பொருளாதார கொள்கைகளை ஏற்றுக் கொண்டது இந்த இரு(காங், பாஜ)கட்சிகளும் தானே. அறிவை வளர்க்கும் கல்வி, உயிரை காப்பாற்றும் மருத்துவம்,குடிநீர் வினியோகம், போக்குவரத்து, வானுர்தி நிலையம் நடத்துவது என எல்லாம் தனியார் என்றால் அரசின் வேலை என்ன என்ற கேள்வி எழுகிறது.
தம்பி (விஜய்) அதை(காங்கிரசுடன் கூட்டணி சேர்வதை குறிப்பிடுகிறார்) நினைக்கிறார்.. எங்களுக்கு காங்கிரஸ், இந்திய கட்சிகள், திராவிட கட்சிகளுடன் தேர்தல் உடன்பாடு இல்லை. இதற்கு மாற்றாக தான் இந்த நிலத்தில் இந்த அரசியலை கட்டி எழுப்புகிறோம்.
இவ்வாறு சீமான் பேட்டியளித்தார்.
பனையூர் தொகுதியில் விஜய் போட்டியிட வேண்டும் என்று அவர்கள்(தவெகவினர்) விருப்ப மனு தாக்கல் செய்துள்ளது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான், பனையூர் என்ற தொகுதி இல்லை என்பது பிள்ளைகளுக்கு (தவெகவினர்) தெரியவில்லை. அவர்கள் சிறு பிள்ளைகள். இது வியாபாரம் இல்லை.. விற்பனை பண்டம் என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். பனையூர் தொகுதி என்று ஒன்று இல்லை என்பது அவர்களுக்கு தெரியவில்லை. போக, போக அவர்கள் கற்றுக் கொள்வார்கள் என்று பதிலளித்தார்.
உங்கள் இருவருக்கும் ஆலோசனை நடந்த இடம்பெற்ற இடம் கீழ்பாக்கம், சரிதானே
1). தமிழகத்தில் தற்போதைய காலகட்டத்தில் மக்களை கவரும் வகையில் பேச தெரிந்த நபர்கள் இரண்டு பேர் தான்.
2). ஒன்று அண்ணாமலை அவர்கள் இரண்டாவது செபாஸ்டியன் சீமான் என்ற கருத்தில் மாற்று கருத்துக்கு இடம் இல்லை.
3). அண்ணாமலை நேர்மறை எண்ணங்களுடன் பேசுவார் செபாஸ்டியன் சீமான் எதிர்மறை எண்ணங்கள் உடன் பேசுவார்.
4). மக்கள் தங்கள் தங்கள் உள்மனது எண்ணங்கள் உடன் அவர் அவருக்கு பிடித்தவரை பின் தொடர்வார்கள். பாஸ்டீவ் மற்றும் நெகடிவ் இரண்டும் இருந்ததால் தான் கரெண்ட் உற்பத்தி ஆகும். இருக்க வேண்டியதுதான்.
5). சீமான் திராவிட சித்தாந்தம் உள்ள தமிழர்களை குறிப்பாக இளைஞர்களை ஆரம்பத்தில் இருந்து திமுக பக்கம் இருந்து அகற்றி தம்மிடம் வைத்து கொள்ள பார்க்கிறார். ஏனெனில் அவரும் ஒரு மாடர்ன் திராவிட சித்தாந்தங்களை தளுவிய நபர் தான்.
6). இடையில் சிவ பூஜையில் கரடி புகந்த கதையாக ஜோசஃப் விஜய்யும் அதே திசையில் பயணிக்க தற்பொழுது சீமான் செபாஸ்டின் அவர்களுக்கு தலைக்கு மேல் கோபம்.
7). கோபத்தின் வெளிப்பாடு மேலும் அதில் யார் சிறந்தவர் என்ற போட்டியில் தான் இது மாதிரி தெரு சண்டை போல் பேட்டி கொடுப்பது.
8). ஜோசஃப் விஜய் உண்மையில் செபாஸ்டியன் சீமான் இடம் கேட்டு இருந்தால் அதை செபாஸ்டியன் சீமான் இந்த மாதிரி பொது வெளியில் பேசுவது என்பது நாகரீகம் அல்ல.
9). செபாஸ்டியன் சீமான் பற்றி தெரிந்தும் ஜோசஃப் விஜய் அவரிடம் கூட்டணி பற்றி கேட்டு இருந்தால் உண்மையில் ஜோசஃப் விஜய்க்கும் சற்று புத்தி சுவாதீனம் உள்ளது போன்று காட்சியளிக்கின்றது.
10). மொத்தத்தில் தமிழன் வரும் காலத்தில் தமிழன் என்ற அடையாளம் இல்லாமால் போக இரண்டு திராவிட கட்சிகள், செபாஸ்டியன் சீமான், ஜோசஃப் விஜய், இத்தாலி சூனியக்காரி, சீன அடிவருடிகள் கட்சி கடுமையாக உழைத்து கொண்டு உள்ளார்கள் என்று சொன்னால் மிகையாகாது.
திமுகவிடம் இருந்து எவ்வளவு வாங்கி இருக்கிற
தென் மாவட்ட கிறிஸ்தவர்களிடையே காங்கிரஸுக்கு ஓட்டு வங்கி உள்ளது. ஆகவே, அவர்களை ஜோசப், சைமன் கூட்டணியில் சேர்ப்பது சரியாக இருக்கும்.
ஆமை கறி இட்லியில் வைத்து பரிமாறிய கதை போல உள்ளது. ஏகே 76 கூட ஞாபகம் வருகிறது
தம்பி நாம இருவரும் ஒன்னு. அவன் வேற இனம்.
நல்ல கருத்துக்கள். மக்களிடம் சாராயமும் 3000 ரொக்கமும் வந்து சேர்ந்து விட்டது . 4 டம்ளர் 4 தட்டு 2 கடாய் 4 ஸ்பூன் கொடுத்துவிட்டார்கள் . ஒரு புடவை ஒரு செட் பந்த் ஷர்ட் துணி வந்து விட்டது. தையல் கூலி 750 கொடுத்து விட்டார்கள் DMK கு குத்த எங்க அம்மா தயாராகி விட்டார்கள்
அண்ணன் தி.மு.க , காங்கிரஸ் உறவு கெட்டுவிடாமல் தி.மு.க கூட்டணியிலேயே காங்கிரஸ் நீடிக்க வேண்டும்! காங்கிரஸ் வாக்குகள் த.வெ.க விற்கு போய் அது தி.மு.கவின் வெற்றியை பாதித்து விடக் கூடாது என தி.மு.கவின் குரலாக விஜயிடம் பேசி இருக்கிறார்.மொத்தத்தில் தி.மு.க விற்கு முட்டுக் கொடுத்திருக்கிறார்.
என்னாங்க இது? நேத்து கமல் இன்று சீமான். என்னதான் நடக்குது இங்கே?