இதுவரை அடையாத வெற்றி இந்தத் தேர்தலில் கிடைக்கும்; முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
விருதுநகர்: 'எதிர்வர இருக்கும் சட்டசபை தேர்தலில், திமுக கூட்டணி இதுவரை அடையாத வெற்றியை அடையப் போகிறது ,' என்று விருதுநகரில் நடந்த திமுக இளைஞரணி தென்மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் பேசியதாவது; 2004ல் தென்மண்டல மாநாடு நடத்தினோம். 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றோம். 2019ல் தேர்தல் பிரசாரத்தை இங்கிருந்து தொடங்கி 39 இடங்களை கைப்பற்றினோம். 2023ல் 40ம் நமதே என்று இங்கிருந்து சொல்லி தான் 40 தொகுதிகளையும் கைப்பற்றினோம். 2026ல் புதிய சாதனை படைக்கத் தயாரா? நான் ரெடி? நீங்க ரெடியா?
முறியடிக்கணும்
தாய் மொழியான தமிழுக்கு பல்வேறு காலகட்டங்களில் ஆபத்து ஏற்படும் போது, கடுமையாக போராடி தடுத்து இருக்கிறோம். இருப்பினும், மும்மொழி கொள்கை என்ற பெயரில் ஹிந்தி மொழி திணிப்பு என்ற ஆபத்து இன்றும் நமது தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் கத்தி இருக்கிறது. மொழியை அழித்தால், அடையாளத்தை அழித்து விடலாம் என்று நினைக்கிறார்கள். அதை முறியடிக்க நீங்க வேண்டும்.
நீட் போன்ற தேர்வுகளைக் கொண்டு வந்து பழைய நிலைமையை கொண்டு வர முயற்சிக்கிறார்கள். மாநிலங்களின் கூட்டமைப்பு தான் இந்தியா. கூட்டாட்சிக்கு எவ்வளவு மதிப்பு வைக்க வேண்டும் என்று நாம் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தாலும், மாநிலங்களுக்கு அதிகாரமே இல்லாத நிலைமை தான் இருந்தது. சுதந்திர தினத்தில் கூட தேசிய கொடியை ஏற்ற முடியாதது உள்ளிட்ட பல பிரச்னைகள் இருந்தது.
தொட முடியாத மாநிலம்
இதை எல்லாம் போராடி, நிலைமையை மாற்றி, ஓரளவுக்காவது மாநிலங்களுக்கு அதிகாரம் கிடைப்பது போல் செய்தோம். மாநில கட்சிகளால் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று முதன் முதலில் ஆட்சியை பிடித்து காட்டியது திமுக தான். ஆனால், இப்போது மீண்டும் மாநிலங்களின் அதிகாரங்களை மத்தியில் கொண்டு போய் குவிக்கிறார்கள். மாநில கட்சிகளே இருக்கக் கூடாது என்று பாஜ செயல்படுகிறது. ஆனால், அவர்களால் தொட முடியாத ஒரே மாநிலம் தமிழகம் தான்.
அடிமைகளும், துரோகிகளும்,எதிரிகளும் சேர்ந்து கொண்டு தமிழகத்தின் சுயமரியாதையை அடகு வைக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். சுயமரியாதையை விட்டுக்கொடுக்கும் கூட்டத்தை வீழ்த்த நீங்கள் அனைவரும் தேவை. இளைஞர்கள் மொழிப் பற்று, மொழியாற்றலுடன் இருக்க வேண்டும்.
ஜீரோ தான்
நாம் தான் 7வது முறையாக ஆட்சியமைக்கப் போகிறோம். நம்முடைய எதிரிகளுக்கும் கூட இதில் சந்தேகம் கிடையாது. மத்திய அரசு, நாளிதழ்கள் வெளியிடும் தரவரிசைப் பட்டியல்களில் தமிழகம் தான் 'டாப்'. தமிழகத்திற்கு நிகர் தமிழகம் மட்டும் தான். இப்படி அனைத்திலும் நம்பர் ஒன்னாக இருந்தாலும் பட்ஜெட்டில் நமக்கு ஒன்றும் கிடையாது. இந்தாண்டு பட்ஜெட்டிலும் வழக்கம் போல ஈரத்துண்டு தான்.
கல்வி நிதியைக் கொடுங்கள், மெட்ரோ நிதியைக் கொடுங்கள், நீட் தேர்வில் விலக்கு கொடுங்கள், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டிக் கொடுங்கள் என்று நாம் தொடர்ந்து கேட்கிறோம். ஆனால், அவர்கள் நமக்கு கொடுத்தது ஜீரோ. அப்போது நாமும் அவர்களுக்கு தேர்தலில் ஜீரோ தான் கொடுக்க வேண்டும். பாஜவுக்கு மட்டுமல்ல, என்டிஏ கூட்டணியை சட்டசபை தேர்தலில் ஜீரோ ஆக்க வேண்டும்.
இதுவரை இல்லாத...
தமிழகத்திற்கு ஜீரோ சொன்ன மத்திய அரசுக்கு எதிர்த்து குரல் கொடுக்காமல், பாஜவின் கிளை செயலாளராக மாறியிருக்கிறார் இபிஎஸ். எடப்பாடி பழனிசாமி, இப்போது முழுதாக 'என்டிஏ பழனிசாமி' ஆகிவிட்டார். பாஜ அரசு கொண்டு வந்திருக்கும் 125 நாள் வேலைத்திட்டத்தை நாம் தடுக்கிறோம் ஆமா? அதை எதிர்த்து அவர் போராடுகிறாராம். இந்தத் திட்டத்தில் என்ன திருத்தங்களை கொண்டு வந்திருக்கிறார்கள்? என்று தெரியாமல் பேசுகிறார்.
தனக்கு பதவி கொடுத்தவர்களையே கட்சியில் இருந்து நீக்கியவர் இபிஎஸ். கடந்த முறை பிரிந்து பிரிந்து தேர்தலில் நின்றவர்கள், இன்று பாஜவுடன் சேர்ந்து சிலர் சேர்ந்து போட்டியிட இருக்கின்றனர். இதுவரை அடையாத வெற்றியை திமுக கூட்டணி அடையப் போகிறது, இவ்வாறு அவர் கூறினார்.
இனி வெற்றி பெற்றால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. அந்த முருக பகவான் தான் உங்களை சூரசம்ஹாரம் செய்ய வேண்டும். ஓம் சண்முகாய நமஹ. .....
பொழுது விடிஞ்சு பொழுது போறதுக்குள்ள ஒரு நாளைக்கு 108 தடவ என்.டி.ஏ மற்றும் பழனிச்சாமிதான். தலிவருக்கு பயம் தொற்றிக் கொண்டது பேச்சிலேயே நல்லாத் தெரியுது!
தமிழக மக்கள் மே மாதம் எப்போது வரும் திமுகவை எப்போது வீட்டுக்கு அனுப்பலாம் என்று காத்து கொண்டு இருக்கிறார்கள்.
சரி
இந்த மாநாடு செலவுத் தொகை எங்கிருந்து வந்தது..எல்லோரும் ஒரே மாதிரி சொல்லணும்.. டோரா புஜ்ஜிகிட்ட சொல்ற மாதிரி நாம ஜெயிச்சிட்டோம் ஜெயிச்சிட்டோம் ஜெயிச்சிட்டோம் அப்போதான் மக்கள் நம்பி ஜெயிக்கப் போற திமுகவிற்கு ஓட்டுப் போடுவாங்க அப்படினு நினைப்பா.. கட்சிக்காரர்கள் கூட நம்ப மாட்டாங்க..
இவருக்கு தேர்தல் தோல்வி வியாதி இதற்கு வைத்தியம் பார்க்கத்தான் பிரதமரே இன்னும் இரண்டு வாரங்களில் தமிழகம் வந்து முதலில் எய்ம்ஸ் மருத்துவ மனையை திறந்து வைத்து இவருக்கு முதலில் வைத்தியம் பார்க்கபோகிரார்களாம் அதற்கு இவர் தயாராக இருக்க வேண்டும் பிறகு எல்லாமே சரியாகிவிடும்
ஆம். எதிர் கட்சிகள் வெல்லும்.. நீங்க சொல்றது சரிதான்
இதுவரை இல்லாத தோல்வியை மக்கள் தங்கள் படும் கஷ்டங்களுக்கு பரிசளிப்பார்கள்
ஆமாம் இருபது சீட் உறுதி
சொல்கிறீர்களா?