டி20 உலகக்கோப்பை: இந்தியாஅபார வெற்றி
வான்கடே:டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 3வது லீக் ஆட்டத்தில் அமெரிக்காவை 29 ரன்களில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 161 ரன் குவித்தது. விக்கெட்டுகள் இழந்து தடுமாறிய போது, அதிரடியாக ஆடிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 84 ரன் விளாசி, அணியின் ரன் குவிப்பிற்கு கைகொடுத்தார்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று துவங்கிய டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 3வது லீக் ஆட்டத்தில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. ரோகித் ஷர்மா, விராட் கோலி, ஜடேஜா போன்ற சீனியர்கள் இல்லாமல் இளம் வீரர்களுடன் இந்திய அணி முதல்முறையாக டி20 உலகக்கோப்பையில் களமிறங்கியது.
இந்த நிலையில், போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.. அதன்படி, இந்தியா பேட்டிங் செய்தது. பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெறவில்லை. அதேபோல, பும்ரா காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக சிராஜ் சேர்க்கப்பட்டார்.
முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அதிரடி வீரர் அபிஷேக் ஷர்மா தனது முதல் பந்திலேயே அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அதன்பிறகு, இஷான் கிஷன் (20), ஷிவம் துபே (0), திலக் வர்மா (25), ரிங்கு சிங் (6), ஹர்திக் பாண்டியா (5) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால், இந்திய அணி 77 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் மட்டும் மறுமுனையில் அணியை மீட்டெடுக்க போராடினார். அவர் 36 பந்துகளில் அரைசதம் அடித்தார். இக்கட்டான சூழலில் இந்திய அணிக்கு தேவையான நேர்த்தியான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தினார். இறுதியில் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 161 ரன் சேர்த்தது. சூர்யகுமார் யாதவ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 49 பந்தில் 84 ரன் குவித்தார்.
162 ரன் இலக்குடன் களமிறங்கிய அமெரிக்க அணிக்கு தொடக்க வீரர்கள் கவுஸ் (6), முக்காமல்லா (2), மோனங்க் படேல் (0) ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர். மிலின்ட் குமார் (34), சஞ்சய் (37) ஆகியோர் ஓரளவுக்கு ரன் சேர்த்து அவுட்டாகினர். அமெரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன் மட்டுமே எடுத்தது. அதனை தொடர்ந்து இந்திய அணி, 29 ரன்களில் வெற்றி பெற்றது.
அமெரிக்க அணியின் சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி, சுபம் ரஞ்சனே அதிகபட்சமாக தலா 37 ரன்கள் எடுத்தனர். மிலிந்த் குமார் 34 ரன்கள் சேர்த்தார். மற்றவர்கள் சோபிக்கவில்லை. இந்திய தரப்பில் முகம்மது சிராஜ் அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார். அர்ஷ்தீப் சிங் அக்ஷர் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
@block_Y@
நம்பர் 2 சூர்யா
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கேப்டனாக அறிமுகமான முதல் போட்டியில் அதிக ரன் குவித்த கேப்டன்கள் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் (84) 2வது இடத்தை பிடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெயில் 88 ரன்னுடன் முதலிடத்தில் உள்ளார்.block_Y
1). வாழ்த்துகள் இந்திய அணி மற்றும் இந்திய கேப்டன் சூரிய குமார் யாதவ் அவர்களுக்கு.
2). வெற்றிகள் தொடரட்டும்.
3). சிக்ஸ் அடிப்பதை குறைத்து நான்கு ரன்கள் நிறைய அடித்தால் நமக்கு T20 உலகப் கோப்பை உறுதி.
4). இந்த ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் இழந்ததில் 8 விகெட்ஸ் கேட்ச் மூலம் என்பதை நினைவில் கொண்டு சிக்ஸ் முடிந்த அளவு தவிர்த்து 4 ரன்கள் அதிகம் அடித்து உலக கோப்பை வென்று எடுக்க வாழ்த்துக்கள்.