தேர்தல் திருவிழாவில் கடை விரிக்கும் புதுக்கட்சிகள்; தவெக மீது உதயநிதி மறைமுக 'அட்டாக்'
விருதுநகர்: கொள்கை, லட்சியம் என்றால் என்ன தெரியாத கூட்டம் ஒன்று இங்கே சுற்றிக் கொண்டு இருக்கிறது என்று தவெகவை துணை முதல்வர் உதயநிதி மறைமுகமாக தாக்கி பேசினார்.
விருதுநகர் கல்குறிச்சியில் திமுக இளைஞரணி மாநாட்டில் அவர் பேசியதாவது;
கொள்கை, லட்சியம் தெரியாமல் வெற்றுக் கூச்சல் போட்டுக் கொண்டு இருக்கும் கூட்டத்தால் தமிழகத்திற்கு எந்த பயனும் கிடையாது. இதனால் அவர்களுக்கே எந்த பயனும் கிடையாது. தேர்தல், தேர்தல் திருவிழா என்றால் தமிழகத்தில் புதிது, புதியதாக கடை விரிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.
தேர்தல் முடிந்தவுடன் அந்த கடை அனைத்தும் காலியாகிவிடும். எந்த கட்டமைப்பு பலம் இல்லாமல், எந்த கட்டுப்பாடும் இல்லாமல் கொள்கை என்றால் என்ன? லட்சியம் என்றால் என்ன எதுவுமே தெரியாமல், வெற்றுக் கூச்சல் போடுகிற கூட்டம் இன்றைக்கு தமிழகத்தில் சுற்றிக் கொண்டு இருக்கிறது. இதனால் தமிழகத்திற்கு எந்தவித பயனும் கிடையாது.
இன்னும் சொல்லப்போனால் அவர்களால் அவர்களுக்கே எந்த பயனும் கிடையாது. இதை தமிழக மக்கள் விரைவில் உணர்த்துவார்கள். அதேபோல திருவிழா நேரத்தில் புது, புது கடைகள் எல்லாம் போடுவார்கள். மக்களை கூப்பிட்டு பொய் விளம்பரங்களை சொல்லி, பொய் வியாபாரம் எல்லாம் பண்ணுவார்கள். பலூன் எல்லாம் ஊதி, குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டுவார்கள்.
அதுமாதிரி தான் இன்றைக்கு தேர்தல், தேர்தல் திருவிழா என்றாலே தமிழகத்தில் புதுசு, புதுசாக கடை விரிக்க ஆரம்பித்து இருக்கின்றனர். திருவிழா அன்றைக்கு போடப்படும் கடைகள், திருவிழா முடிந்த பின்னர் காணாமல் போய்விடும். அதே போல தேர்தல் முடிந்தவுடன் அந்த கடைகள் அனைத்தும் காலியாகிவிடும்.
ஆனால் திமுக மட்டுமே என்றைக்கும் மக்களோடு மக்களோடு நின்று கொண்டு இருக்கிறது. திருவிழாவில் பிள்ளை பிடிப்பவர்,மிட்டாய், சாக்லேட் வாங்கி தருவேன் என்று உள்ளே வருவார்கள். அதேமாதிரி அமலாக்கத்துறை வழக்கில் இருந்து காப்பாத்துகிறேன், பெரா வழக்கில் இருந்து காப்பாத்துகிறேன், மருத்துவக் கல்லூரி ஊழல் வழக்கில் இருந்து நான் உங்களை காப்பாற்றுகிறேன் என இப்படி கேசை எல்லாம் காட்டி, காட்டி இன்றைக்கு அடிமைக் கூட்டத்தை பாசிஸ்ட்டுகள் தூக்கி இருக்கின்றனர்.
இந்த மிரட்டலுக்கு எல்லாம் அடிமை அதிமுக பயப்படலாம், ஆனால் திமுக தொண்டன் எந்த உருட்டல், மிரட்டலுக்கு எல்லாம் பயப்பட மாட்டான், ஏன் என்றால் எங்களை வழிநடத்துவது ஸ்டாலின் என்ற மகத்தான தலைவர். பாசிஸ்டுகள் எவ்வளவு முயற்சி செய்தாலும் சரி, தமிழகம் உங்கள் கைகளில் சிக்காது. தமிழகம் என்றைக்குமே டில்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் தான்.
இவ்வாறு உதயநிதி பேசினார்.
என்னதான் நீங்க அப்பனைப்பற்றி போற்றினாலும் புகழ்ந்தாலும் இனி உங்கள் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது இனி கம்முன்னு இருக்கணும் அடுத்தவர்களை சீண்டக்கூடாது அவதூறாக பேசக்கூடாது
அவுட்ஆப் கண்ட்ரோல் என்றால் புத்தி பிசகிய கும்பல் என்று அர்த்தம். உண்மை தான்.
தொடை நடுங்கி நிதியின் புலம்பல். தேர்தல் தோல்வி பயம் வாட்டுகிறது
ஆமா வந்துட்டாரையா, நீட் ஒழிப்பு, சனாதன ஒழிப்பு நாயகர்...
தொண்டன் தொண்டன் என்று சொல்லியே தமிழ் நாட்டை சுரண்டியது போதாதா , தொண்டனும் அடிமையும் இப்படியே இருப்பார்கள் என்று கருதாதே தம்பி, மாயாவதி கதை மறந்து விடாதே, பணத்தை வைத்து வாக்குகளை விலைக்கு வாங்கி விடலாம் என்ற திமிர் உன் அத்தை , அப்பா மற்றும் உங்களின் கொத்தடிமை அமைச்சர்கள் நினைக்கலாம் , என்ன நடக்கும் பார்க்கலாம்
இவர் மட்டும் பெரிய கடை நடத்தலாம். மத்த எவனும் கடை போடக்கூடாது.
கோயில் திருவிழா கடைகளை கேலி பேசிட்டார். மக்களே கவனிங்க...
Another Controversy.
....அவுட் ஆஃப் கன்ட்ரோல் என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்வது எதனால்? இலர்கள் வேறு மர்ம நபர்களின் கன்ட்ரோலில் உள்ளதாக கூறப்படுகிறதே?... அதற்கான சுய ஆறுதலா?மேலும்
-
ஹரியானா கண்காட்சியில் ராட்டினம் சரிந்தது; மீட்பு பணியில் போலீஸ் அதிகாரி பலி
-
ரஷ்யாவில் இந்தியர் உள்பட 8 பேருக்கு கத்திக்குத்து; கொடூரமாக தாக்கிய 15 வயது வாலிபர் கைது
-
அமைச்சர்களால் தேர்தலை சந்திப்பதில் திமுகவுக்கு பதற்றம்; நிர்மலா சீதாராமன்
-
சஸ்பெண்ட் போலீஸ் அதிகாரிகளை மீண்டும் பணியில் சேர்க்க முடிவு; ஐ.ஜி.,க்கள், எஸ்.பி.,க்களுக்கு டி.ஜி.பி. சுற்றறிக்கை
-
அமெரிக்காவின் முயற்சிக்கு முட்டுக்கட்டை; கிரீன்லாந்தில் பிரான்ஸ், கனடா தூதரகம் திறப்பு
-
காமராஜரால் முடியாததை நாங்கள் செய்தோம்: துரைமுருகன்