விபத்தில் மின் கம்பம் சேதம் இரவு முழுவதும் மின்தடை

பள்ளிப்பாளையம்; பள்ளிப்பாளையம் ஆர்.எஸ்., சாலையில், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டது. காவிரி பகுதியில் லாரி சென்றுகொண்டிருந்தபோது கட்-டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி, அடுத்து இருந்த டெய்லர் கடைக்குள் புகுந்து நின்றது. இதில், 3 பேர் படுகா-யமடைந்தனர். மேலும், 2 மின் கம்பம், மின் ஒயர் ஆகியவை முற்றிலும் சேதமடைந்தது.


இதனால், நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று பகல் முழுவதும், காவிரி பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இந்த மின்தடையால் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலா-ளர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.நேற்று மாலை வரை, சேதமடைந்த மின் கம்பம், மின் ஒயர்கள் அகற்றப்பட்டு, புதிய மின் கம்பம் அமைக்கும் பணியில் மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

Advertisement