பி.ஜி.,-டி.ஆர்.பி., போட்டித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கவுன்சிலிங்
நாமக்கல்; நாமக்கல்லில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பணி நியமன ஆன்லைன் கவுன்சிலிங், நேற்று துவங்கியது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர், கணினி பயிற்றுனர் என, 1,996 காலி பணியிடங்களுக்கு தேர்வு நடந்தது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு, இணைய வழி கலந்-தாய்வு நடத்தப்பட்டு, தகுதியான விண்ணப்பதா-ரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும். அதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்-கான பள்ளிகளை தேர்வு செய்யும் ஆன்லைன் கலந்தாய்வு, மாநிலம் முழுவதும், ஒரு சில மாவட்டங்களில், நேற்று துவங்கியது.நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்-பள்ளியில் நடந்த கவுன்சிலிங்கில், மாவட்டத்தில் வெற்றி பெற்ற, 59 பேர் பங்கேற்றனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எழிலரசி தலை-மையில் நடந்தது. முதல் நாளான நேற்று, தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், பொருளியல் என, 6 பாடப்பிரிவுகளுக்கு நடந்தது. இந்த பாடங்களில், நாமக்கல் மாவட்டத்தில், காலிப்பணியிடம் இல்லாததால், வெளிமாவட்-டங்களில் காலியாக உள்ள பணியிடங்களை, தேர்வர்கள் தேர்வு செய்தனர்.
'அதில், தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் நியமன ஆணை வழங்-குவார்' என, பள்ளிக்கல்வித்துறையினர் தெரி-வித்தனர்.
மேலும்
-
சேலத்தில் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி
-
மூன்று குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்: மோகன் பாகவத் வலியுறுத்தல்
-
திமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்போம்: திருமா திட்டவட்டம்
-
மே 3ம் தேதி நீட் தேர்வு; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
-
சந்தேகமா... டாக்டரைக் கேளுங்கள் பகுதிக்காக
-
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா வரி குறைத்துள்ளது: மத்திய அமைச்சர் சிவராஜ் சவுகான்