டில்லி 'உஷ்ஷ்ஷ்...!' இனிமேல் அதிக நிதி!

3


'எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை மோடி அரசு வஞ்சிக்கிறது. எங்கள் மாநிலத்திலிருந்து மத்திய அரசுக்கு ஏகப்பட்ட வரி கிடைக்கிறது. ஆனால், எங்களுக்கு மோடி அரசு அதிகம் நிதி தருவதில்லை. மக்கள் தொகை அதிகமாக உள்ள வட மாநிலங்களுக்கு தான் அதிக நிதி செல்கிறது' என, தமிழகம் உட்பட தென் மாநில முதல்வர்கள் பிரதமர் மோடியை வசை பாடினர்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்த போது, 16வது நிதி ஆணையத்தின் சிபாரிசுகளை மத்திய அரசு ஏற்றதாக தெரிவித்தார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய அரசு எப்படி நிதி ஒதுக்கும் என்பதை இந்த சிபாரிசுகள் தெரிவிக்கின்றன. மத்திய அரசுக்கு எந்த மாநிலம் அதிகமாக வரி வசூலித்து தருகிறதோ, அதற்கு ஏற்றபடி அந்த மாநிலத்துக்கு மத்திய அரசு தொகுப்பிலிருந்து நிதி ஒதுக்கப்படும். இதுவரை, மக்கள் தொகை அடிப்படையில் இந்த நிதி ஒதுக்கப்பட்டு வந்தது; ஆனால், இனிமேல் நிலைமை மாறிவிடும்.



இந்த புதிய சிபாரிசுகளால் கர்நாடகா, கேரளா, ஹரியானா, குஜராத், தமிழகம், மஹாராஷ்டிரா ஆகியவை பயன்பெறும். அதே சமயம் மத்திய பிரதேசம், உ.பி., மேற்கு வங்கம், பீஹார், ஒடிஷா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு இதுவரை கிடைத்த அதிக நிதி கிடைக்காது.


இதனால் அவற்றுக்கு, இனி, 7,300 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். குறிப்பாக, பா.ஜ., ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி கிடைக்காது. இனிமேல் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள், அவர்களுக்கு வழக்கமான குற்றச்சாட்டை மத்திய அரசு மீது சுமத்த முடியாது.

Advertisement