குடோனாக மாறிய நகராட்சி கூட்ட அரங்கம் புளியம்பட்டி கவுன்சிலர்கள் ஆதங்கம்

புன்செய்புளியம்பட்டி: புன்செய் புளியம்பட்டி நகராட்சியில், மன்ற கூட்டம் நடத்த அரங்கம் உள்ளது. இங்கு தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் அமர்வதற்கு மேஜை மற்றும் மைக், ஸ்பீக்கர் வசதி உள்ளது. இந்நிலையில் கூட்ட அரங்கில் அட்டை பெட்டிகளில் தளவாட பொருட்கள் அடுக்கி வைத்துள்ளனர்.


இதனால் சில மாதங்களாக நகர்மன்ற கூட்டம் தலைவர் அறையில் நடக்கிறது. இட
நெருக்கடி ஏற்படுவதாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


இதுகுறித்து கவுன்சிலர்கள் கூறியதாவது:


நகராட்சி கூட்ட அரங்கில் மைக் மற்றும் ஸ்பீக்கர் வசதி இருந்ததால், கோரிக்கைகளை அனைவருக்கும் புரியும் வகையில் தெரிவித்து வந்தோம். தற்போது கூட்ட அரங்கில் அட்டை பெட்டிகளில் தளவாட பொருள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதால், சில மாதங்களாக தலைவர் அறையில் கூட்டம் நடக்கிறது.


மூன்று மாதத்துக்கு ஒருமுறை தான் கூட்டம் நடக்கிறது. அதுவும் இப்படி இருந்தால் எப்படி? தளவாட பொருட்களை அகற்றிவிட்டு அரங்கில் கூட்டத்தை நடத்த கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.

Advertisement