உலக கோப்பை வாய்ப்பு எப்படி: சிராஜ் நெகிழ்ச்சி
மும்பை: சிராஜ் வாழ்வில் நடந்தது எல்லாம் கனவு போல உள்ளது. 'டி-20' போட்டியில் புறக்கணிக்கப்பட்ட இவருக்கு திடீரனெ உலக கோப்பை வாய்ப்பு தேடி வந்தது. 24 மணி நேரத்தில் களமிறங்கி அதிசயம் நிகழ்த்தினார்.
இந்திய அணியின் 'வேகப்புயல்' முகமது சிராஜ். இவரை 'டி-20' போட்டியில் சேர்ப்பதில்லை. தற்போதைய 'டி-20' உலக கோப்பை தொடரில் இருந்து ஹர்ஷித் ராணா (முழங்கால் காயம்) விலக, சிராஜ் பக்கம் அதிர்ஷ்டம் அடித்தது. 557 நாளுக்கு பின் சர்வதேச 'டி-20' போட்டியில் பங்கேற்ற இவர், அமெரிக்காவுக்கு எதிராக 3 விக்கெட் வீழ்த்தி, வெற்றிக்கு கைகொடுத்தார்.
இது பற்றி சிராஜ் கூறுகையில்,''ரியல் மாட்ரிட்-ரியல் சோசியடாட் அணிகள் மோதும் கால்பந்து போட்டியை காண ஸ்பெயின் செல்ல தயாராகி கொண்டிருந்தேன். திடீரென (பிப். 6ல்) அழைத்த கேப்டன் சூர்யகுமார்,'உங்களது 'லக்கேஜை' எல்லாம் 'பேக்' செய்து கொண்டு மும்பை வாருங்கள். உலக கோப்பை போட்டியில் விளையாட வேண்டும்,'என்றார். அதற்கு நான் 'பிரதர் சும்மா 'ஜோக்' அடிக்காதீங்க' என்றேன். அவரோ,'உண்மையா தான் சொல்றேன். ப்ளீஸ் 'ரெடி' ஆகுங்கள்,'என்றார். சிறிது நேரத்தில் இந்திய தேர்வுக்குழு உறுப்பினர் பிரக்யான் ஓஜாவும் அழைத்து வாய்ப்பை உறுதி செய்தார். அப்போது 'நமக்கு என்று ஆண்டவன் எழுதி இருப்பதை யாராலும் மாற்ற முடியாது' என்பதை உணர்தேன்.
ஐதராபாத்தில் இருந்து மும்பை பறந்த போது, திடீர் மாற்றத்தை எண்ணி வியந்தேன். எனக்கு 'டி-20' அணியில் வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில், உலக கோப்பை தொடரில் இடம் பெற மாட்டேன் என்பதை அறிந்திருந்தேன். ஆனால், பிப். 7ல் உலக கோப்பை போட்டியில் பங்கேற்றது எதிர்பாராதது. சமீபத்திய ரஞ்சி கோப்பை போட்டியில் 'விக்கெட்-டூ-விக்கெட்' அளவில் பந்துவீசினேன். இதே போன்று அமெரிக்காவுக்கு எதிராகவும் துல்லியமாக பந்துவீசினேன்,''என்றார்.
மேலும்
-
ஜப்பானில் மீண்டும் ஆட்சியை பிடித்தார் பிரதமர் தகாய்ச்சி
-
பாகிஸ்தான் முழு அடைப்பு போராட்டம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
-
வங்கதேச 'மாஜி' அமைச்சர் சிறை காவலில் மரணம்
-
அணுசக்தி செறிவூட்டலை கைவிட மாட்டோம்: ஈரான் அமைச்சர் திட்டவட்டம்
-
காங்., - எம்.பி.,யின் பாக்., தொடர்பை விசாரிக்க அசாம் முதல்வர் பரிந்துரை
-
செனாப் நதியில் ரூ.5,129 கோடியில் சவல்கோட் நீர்மின் திட்டம் துவங்கியது