அழிவுகரமான கம்யூனிச சித்தாந்தத்திலிருந்து இந்தியா விடுபட வேண்டும்: அமித் ஷா உறுதி
ராய்ப்பூர்: அழிவுகரமான கம்யூனிச சித்தாந்தத்திலிருந்து இந்தியா விடுபட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது: நக்சலைட்டுகள் தங்களது ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும். சரணடைந்தால் அரசிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். இடதுசாரி பயங்கரவாதம் என்பது ஒரு சித்தாந்தத்தால் இயக்கப்படும் சவால்.
வளர்ச்சி அல்லது சட்டம் ஒழுங்கு பிரச்னை மட்டுமல்ல. கம்யூனிச சித்தாந்தம் வளர்ச்சியைத் தடுக்கிறது. அழிவுகரமான கம்யூனிச சித்தாந்தத்திலிருந்து இந்தியா விடுபட வேண்டும். கம்யூனிஸ்டுகள் எங்கெல்லாம் ஆட்சியில் இருந்தார்களோ அங்கெல்லாம் அவர்களால் வளர்ச்சியைக் கொண்டுவர முடியவில்லை. கம்யூனிச சித்தாந்தம் அழிவைக் குறிக்கும் ஒரு சித்தாந்தமாகும்.
ஜனநாயக அரசியலில் கம்யூனிச சித்தாந்தம் இனி இல்லை. கேரளாவில், அது ஓரளவுக்கு உயிர்வாழ்கிறது; இருப்பினும், மக்கள் திருவனந்தபுரத்தில் இருந்து மாற்றத்தைத் தொடங்கிவிட்டனர். அரசு ஒரு தோட்டாவை கூட சுட விரும்பவில்லை. இவ்வாறு அமித்ஷா பேசினார்.
நக்சலைட் ஒழிப்புக்கு அப்பறம் கம்யூனிஸ்ட் ஒழிப்பு சூப்பர். அமிட்ஷாஜி வாழ்க.
காலத்திற்கு ஒவ்வாத கம்யூனிஸ்டுகளின் தற்போதைய சித்தாந்தம். ஓட்டுக்கா மதத்தினருடன்.... தேர்தலுக்காக கைஏந்தி பிச்சையய் எடுத்து அடிப்படையை சித்தாந்ததிய உடைத்து சொந்த லாபம் காணும் போக்கு நாட்டிற்கு எதிரான தீவிர வாதிகளை போஷித்து வளர்ப்பது தவிர நம் நாட்டின் நலனுக்கு எதிர்த்து சீனாவை ஆதரிக்கும் போக்கு இவையெல்லாம் வெறுப்படைய செய்கின்றன. தோழர் சங்கங்களை வைத்து முன்பெல்லாம் தனியார் முதலாளிகளை அரசை மிரட்டுவது இப்போது பல அரசால் கட்சிகள் தொழிற்சங்களில் புகுந்து விட்டதால் புழுக்கம்.
கடவுள் எல்லாம் இல்லை அழகா இருந்தா நல்லவன் என்பார்கள் இல்லை என்றால் கெட்டவன் என்பார்கள் அறிவு, முயற்சி என்பதெல்லாம் இங்கு பயனில்லை, இந்த படிநிலை மக்கள் உணர வேண்டும்
இந்தியாவில் இருப்பது சோத்து கம்யூனிஸ்டுகள். சோத்துக்கு கொள்கைகளை விற்பவர்கள். பயம் வேண்டாம்.
அடிக்கிற அடியில செஞ்சட்ட கம்யூனிஸ்ட இந்தியா வை விட்டு, பஞ்சட்டயாகி கிழஞ்சி போன ரசியாவுக்கும், ஈன பிறவிகளுக்கு ஆதரவு தரும் சீனாவுக்கும் ஒடி ஒளியட்டும் …
லொள்.. LOL..ரஷியாவும், சீனாவும் நம்ம ஜிக்ரி தோஸ்த்ங்க.
ரெண்டு நாட்டிலும் ஜனநாயகம் இருக்கா லொள்ளு ? சீனாவில் ஒரு கட்சி ஆட்சியை மக்கள் வெறுக்க தொடங்கிவிட்டார்கள் ..ஊழல் செய்தார்கள் என்று கிட்டத்தட்ட பதினேழு ராணுவ ஜெனரல்களை பதவியில் இருந்து தூக்கி இப்போ அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா என கூட தெரியவில்லை.. புவிசார் அரசியலில் சித்தாந்தத்தை அளவுகோலாக வைத்து எந்த நாடும் மற்ற நாட்டுடன் நடப்பு வைத்து கொள்வதில்லை ....
அப்பாவி அறிவுக்கு ரெண்டு கிலோ புண்ணாக்கு இலவசம்மேலும்
-
காஞ்சிபுரம் பட்டு சேலையில் ஜரிகையின் தரம் குறைகிறது; தங்கம், வெள்ளி விலை ஏற்றம் காரணம்
-
வனத்துறையிடம் தி.மு.க. வலியுறுத்தல்
-
வாக்காளர் பட்டியல்; பார்வையாளர் ஆய்வு
-
உடுமலை - திருப்பூருக்கு பஸ் வசதி குறைவு; நெரிசலில் பயணிக்கும் மக்கள்
-
கவுரவ விரிவுரையாளர்கள் தொடர் 'ஸ்டிரைக்' அரசை கண்டித்து நேற்று துவக்கம்
-
என்.எம்.எம்.எஸ். தேர்வுக்கு நடுநிலைப்பள்ளியில் பயிற்சி