ஜப்பானின் இறையாண்மை, நீர் நிலைகளை பாதுகாப்போம்; பிரதமர் சனே தகாய்ச்சி சபதம்

டோக்கியோ: ஜப்பானின் இறையாண்மை, நீர்நிலைகள் மற்றும் வான்வெளியைப் பாதுகாப்போம் என அந்நாட்டு பிரதமர் சனே தகாய்ச்சி சபதம் விடுத்து உள்ளார்.


ஜப்பானில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் எல்டிபி கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது. தனது மகத்தான தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, பிரதமர் சனே தகாய்ச்சி நிருபர்களிடம் கூறியதாவது: ஜப்பான் அதன் பிராந்திய நீர்நிலைகள் மற்றும் வான்வெளி உட்பட இறையாண்மையை பாதுகாப்பதில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கும்.


நமது நாட்டின் அமைதி, சுதந்திரம், மற்றும் நமது குடிமக்களின் உயிர்கள் மற்றும் பாதுகாப்பை நாங்கள் உறுதியாகப் பாதுகாப்போம். நாங்கள் உளவுத்துறை திறன்களையும் மேம்படுத்துவோம். நெருக்கடிகளைத் தடுப்போம். மேலும் எங்கள் தேசிய நலன்களை பாதுகாக்க ஒரு அமைப்பை நிறுவுவோம். ஜப்பானில் வெளிநாட்டு முதலீடுகளால் ஏற்படும் தேசிய பாதுகாப்பு அபாயங்களை மறுபரிசீலனை செய்ய ஒரு குழுவை அமைப்பதற்கான சட்டத்தை கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு சனே தகாய்ச்சி கூறியுள்ளார்.

Advertisement