தேசிய நலனுக்கான சிறந்த ஒப்பந்தம்; மத்திய அமைச்சர் சிவராஜ் சவுகான் பெருமிதம்

லக்னோ: இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம், தேசிய நலனுக்கான சிறந்த ஒப்பந்தம் என மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்து உள்ளார்.


உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நிருபர்கள் சந்திப்பில் சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது: இந்திய விவசாயிகளின் நலன்கள் பாதிக்கப்படாமல் இருந்ததற்காக
பிரதமர் மோடிக்கு நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம், தேசிய நலனுக்கான சிறந்த ஒப்பந்தம்.


விவசாயிகளின் நலன்கள் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன. இந்த வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவின் விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களின் கனவுகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும். இதனால் அவர்கள் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியின் பாதையில் விரைவாக செல்ல முடியும். இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்து உள்ளார்.

Advertisement