ரஞ்சி கோப்பை: அரையிறுதியில் கர்நாடகா
மும்பை: ரஞ்சி கோப்பை காலிறுதியில் ராகுல் சதம் கைகொடுக்க, கர்நாடக அணி, 5 விக்கெட்டில் மும்பையை வீழ்த்தியது.
மும்பையில் நடந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் காலிறுதியில் மும்பை, கர்நாடகா அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் மும்பை 120, கர்நாடகா 173 ரன் எடுத்தன. 2வது இன்னிங்சில் மும்பை 377 ரன் எடுத்தது. 3வது நாள் முடிவில் கர்நாடகா அணி 2வது இன்னிங்சில் 113/2 ரன் எடுத்து, 212 ரன் பின்தங்கி இருந்தது. ராகுல் (60), கருண் நாயர் (9) அவுட்டாகாமல் இருந்தனர்.
நான்காம் நாள் ஆட்டத்தில் கருண் (13) அவுட்டாக, ராகுல் சதம் அடித்தார். இவர் 130 ரன்னில் அவுட்டான போதும், ஸ்மரன் (83), வித்யாதர் (31) ஜோடி அவுட்டாகாமல் இருந்து அணியை வெற்றி பெறச் செய்தது. கர்நாடக அணி 2வது இன்னிங்சில் 325/6 ரன் எடுத்து, 4 விக்கெட்டில் வென்று, அரையிறுதிக்குள் நுழைந்தது.
* இந்துாரில் நடந்த போட்டியில் மத்திய பிரதேச அணி (152, 234), 56 ரன்னில் வீழ்த்திய ஜம்மு அண்டு காஷ்மீர் (194, 248) அணி, அரையிறுதிக்கு முன்னேறியது. பெங்கால் அணிக்கு (629) எதிரான காலிறுதியில் ஆந்திர அணி (295, 64/3) 270 ரன் பின்தங்கி இருந்தது.
மேலும்
-
'அமெரிக்க வரி உயர்வுக்கு பிறகும் பின்னலாடை ஏற்றுமதி சரியவில்லை'
-
உணவு தொழிலில் வாய்ப்புகளை அறிய சேலத்தில் முதலீட்டாளர்கள் சந்திப்பு
-
'இந்தியன் கேஷூ' பிராண்டு முந்திரி ஏற்றுமதிக்கு ஊக்கம்
-
டெக்ஸியான் நிறுவனத்துக்கு சென்னையில் புது அலுவலகம் 2,000 வேலைவாய்ப்பு உருவாகும்
-
கடந்தாண்டு 2.80 லட்சம் டன் தேயிலை ஏற்றுமதியில் சாதனை
-
போர் விமான மின்னணு பாகம் தயாரிக்க ஆர்டர்