ஸ்காட்லாந்திடம் வீழ்ந்தது இத்தாலி: 'டி-20' உலக கோப்பையில் ஏமாற்றம்
கோல்கட்டா: 'டி-20' உலக கோப்பை அறிமுக போட்டியில் இத்தாலி அணி, 73 ரன்னில் ஸ்காட்லாந்திடம் தோற்றது.
கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த போட்டியில் ஸ்காட்லாந்து, இத்தாலி அணிகள் மோதின. 'டி-20' உலக தொடரில் அறிமுகம் ஆன இத்தாலி அணிக்கு, கேப்டன் வெய்ன் மேட்சென், 'டாஸ்' வென்று பீல்டிங் தேர்வு செய்தார்.
முன்சே விளாசல்: ஸ்காட்லாந்து அணிக்கு முன்சே, ஜோன்ஸ் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 13.5 ஓவரில் 126 ரன் சேர்த்த போது, அரைசதம் அடித்த முன்சே (84 ரன், 54 பந்து) அவுட்டானார். அடுத்த சில நிமிடத்தில் ஜோன்ஸ் (37) கிளம்பினார். கேப்டன் ரிச்சி பெர்ரிங்டன் (15) ஏமாற்றினார். கடைசி நேரத்தில் லீஸ்க், 5 பந்தில் 22 ரன் எடுக்க, ஸ்காட்லாந்து அணி 20 ஓவரில் 207/4 ரன் குவித்தது. மெக்முல்லன் (41, லீஸ்க் (22) அவுட்டாகாமல் இருந்தனர்.
மனென்டி ஆறுதல்: கடின இலக்கைத் துரத்திய இத்தாலி அணிக்கு ஜஸ்டின் (0), ஆன்டனி (13) ஜோடி துவக்கம் தந்தது. ஸ்மட்ஸ் (22), ஹாரி (37) ஆறுதல் தந்தனர். பென் மனென்டி (52) அரைசதம் அடித்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் திரும்ப, இத்தாலி அணி 16.4 ஓவரில் 134 ரன்னில் ஆல் அவுட்டாகி, வீழ்ந்தது. லீஸ்க் 4 விக்கெட் சாய்த்தார்.
கேப்டன் சோகம்
ஸ்காட்லாந்து அணி பேட்டிங் செய்த போது, டிராகா வீசிய பந்தை, ஸ்காட்லாந்தின் முன்சே அடித்தார். இதை தடுக்க முயன்ற இத்தாலி அணி கேப்டன் வெய்ன் மேட்சென் 42, இடது தோள்பட்டை விலகியது. வலியால் துடித்த இவர், போட்டியில் இருந்து விலகினார். மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்பது சந்தேகம் தான்.
மேலும்
-
'அமெரிக்க வரி உயர்வுக்கு பிறகும் பின்னலாடை ஏற்றுமதி சரியவில்லை'
-
உணவு தொழிலில் வாய்ப்புகளை அறிய சேலத்தில் முதலீட்டாளர்கள் சந்திப்பு
-
'இந்தியன் கேஷூ' பிராண்டு முந்திரி ஏற்றுமதிக்கு ஊக்கம்
-
டெக்ஸியான் நிறுவனத்துக்கு சென்னையில் புது அலுவலகம் 2,000 வேலைவாய்ப்பு உருவாகும்
-
கடந்தாண்டு 2.80 லட்சம் டன் தேயிலை ஏற்றுமதியில் சாதனை
-
போர் விமான மின்னணு பாகம் தயாரிக்க ஆர்டர்