உணவு தொழிலில் வாய்ப்புகளை அறிய சேலத்தில் முதலீட்டாளர்கள் சந்திப்பு
சென்னை: உணவு பொருள்கள் தயாரிப்பு சார்ந்த தொழில் துவங்குவதற்கான வாய்ப்பு தொடர்பான முழு தகவல்களை தெரிவிக்க சேலத்தில் வரும், 20ம் தேதி முதலீட்டாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தமிழக அரசு நடத்துகிறது.
சிறுதானிய உணவு வகைகள், ஊட்டச்சத்து மாவு என, உணவு பொருள்கள் தயாரிப்பை உள்ளடக்கிய உணவு பதப்படுத்தும் தொழில் துறை விரைவாக வளர்ச்சி கண்டு வருகிறது.
உணவு பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு உதவ, பிரதமர் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் தனிநபர், மகளிர் குழுக்கள் தொழில் துவங்க இயந்திரங்களுக்கு, 10 லட்சம் ரூபாய் வரை மத்திய - மாநில அரசுகள் மானியம் வழங்குகின்றன.
இதேபோல், உணவு சார்ந்த தொழில் துவங்க, அரசுகளின் சார்பில் ஊக்குவிப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இது, பலருக்கு தெரியவில்லை.
எனவே, உணவு பதப்படுத்தும் தொழில் துவக்குவதற்கான வாய்ப்பு குறித்து, முதலீட்டாளர்கள், தொழில்முனைவோருக்கு தெரிவிக்க தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் கீழ் செயல்படும் டி.என்., அபெக்ஸ் நிறுவனம், சேலத்தில் வரும், 20ம் தேதி உணவு முதலீட்டு மாநாட்டை நடத்துகிறது.
இதில், உணவு பதப்படுத்தும் தொழில்கள், புதிய தொழில்நுட்பம், அரசின் மானிய சலுகைகள், சந்தை மற்றும் ஏற்றுமதி வாய்ப்பு, தாவரத்தில் இருந்து புரதம் தயாரிக்கும் தொழில்நுட்பம் தொடர்பாக தெரிவிக்கப்பட உள்ளன.
மேலும்
-
காஞ்சிபுரம் பட்டு சேலையில் ஜரிகையின் தரம் குறைகிறது; தங்கம், வெள்ளி விலை ஏற்றம் காரணம்
-
வனத்துறையிடம் தி.மு.க. வலியுறுத்தல்
-
வாக்காளர் பட்டியல்; பார்வையாளர் ஆய்வு
-
உடுமலை - திருப்பூருக்கு பஸ் வசதி குறைவு; நெரிசலில் பயணிக்கும் மக்கள்
-
கவுரவ விரிவுரையாளர்கள் தொடர் 'ஸ்டிரைக்' அரசை கண்டித்து நேற்று துவக்கம்
-
என்.எம்.எம்.எஸ். தேர்வுக்கு நடுநிலைப்பள்ளியில் பயிற்சி