'ஜனநாயகன்' விவகாரம்: தயாரிப்பு நிறுவனம் திடீர் முடிவு
சென்னை: நடிகர் விஜய் நடித்த, ஜனநாயகன் திரைப் படத்துக்கு, மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் சான்று வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த வழக்கை வாபஸ் பெறுவதாக, பட தயாரிப்பு நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது.
நடிகர் விஜய் நடித்த, ஜனநாயகன் திரைப்படத்துக்கு, உடனே தணிக்கை சான்று வழங்கும்படி, சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா, கடந்த மாதம் 9ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவை ரத்து செய்து, தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, கடந்த மாதம் 27ல் உத்தரவிட்டது.
இந்நிலையில், தற்போது படத்தை மறுஆய்வுக்கு அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உயர் நீதிமன்றத்தில் பட தயாரிப்பு நிறுவனம் சார்பில், வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், 'ஜனநாயகன் படத்தை மறுஆய்வு செய்யும்படி மத்திய தணிக்கை வாரியத்தை அணுக, தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளதால், படத்துக்கு தணிக்கை சான்று வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கை, தொடர்ந்து நடத்த விரும்பவில்லை' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும்
-
அமெரிக்க ஒப்பந்தத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை * போராட்டத்திற்கு பாரதிய கிசான் சங்கம் ஆதரவு இல்லை
-
பாகுபாடின்றி தேர்பவனி நடத்த வழக்கு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
-
மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு சலுகை அடையாள அட்டை வழங்கல் அரசு துறைகளில் தள்ளுபடி உண்டு
-
பைக் மீது கார் மோதல் கார்மென்ட்ஸ் ஓனர் பலி
-
ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல வனத்துறை வாகன கட்டணம் ரூ.80 35 கி.மீ., துாரம் பஸ் வசதி ஏற்படுத்தாமல் மலைவாழ் மக்களை தண்டிக்கும் அரசு
-
ஐ20 எரா அறிமுகம் விலை ரூ. 74,000 குறைவு