விரிவுரையாளர் போராட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே அச்சுந்தன்வயல் கிராமத்தில் உள்ள சேதுபதி அரசு கலைக்கல்லுாரியில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து கண்களில் கருப்பு துணி கட்டிபோராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பெண் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு, யு.ஜி.சி., நிர்ணயித்த ரூ.57,800 ஊதியம் வழங்க வேண்டும்.

ஓய்வுபெற்றவர்களுக்கு ரூ.25 லட்சம் பணிக்கொடை உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Advertisement