தி.மு.க., நடிக்கும், வேடம் போடும்
விருதுநகர்: ''தி.மு.க., நடிக்கும்; வேடம் போடும்'' என விருதுநகரில் நடந்த கூட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.
விருதுநகரில் மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் அவர் பேசியதாவது:
மாவட்டத்தின் 7 தொகுதிகளிலும் அ.தி.மு.க., வெற்றி பெற வேண்டும். தி.மு.க., நடிக்கும்; வேடம் போடும், அத் தனையும் தவிடு பொடி யாக்கி வெற்றி காண்போம் என உறுதி ஏற்போம்.
இந்தியாவில் எந்த முதல்வரும் செய்யாத சாதனையாக பழனிசாமி மருத்துவப் படிப்பு சேர்க்கையில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கினார். அரசு பள்ளி மாணவர்கள் பலர் பய னடைந்து வருகின்றனர்.
ஏழை மாணவர்களின் காவலன் பழனிசாமி. இந்தியா என்ற நாடு வல்லரசாக வேண்டும் என விரும்புவது அ.தி.மு.க.,. நம் வாக்குறுதிகளை அனைத்து தரப்பு மக் களிடம் கொண்டு செல்ல வேண்டும். ரூ.2 ஆயிரம் உரிமைத்தொகை வரவு வைக்கப்படும் என்ற அறிவிப்பு ஏழை, எளிய மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது. ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம் என்பது பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
நுாறு நாள் வேலை திட்டத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடியை தி.மு.க., சரி செய்யாததை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றார்.
எம்.எல்.ஏ., மான்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரபிரபா, மாவட்ட அவைத்தலைவர் விஜயக்குமரன், ஒன்றியச் செயலாளர் மச்சராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
முதிர்ச்சியற்ற, பகுதிநேர அரசியல்வாதி: ராகுலை சொல்கிறார் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி
-
ராகுல் எம்பி பதவியை பறிக்க பாஜ எம்பி நோட்டீஸ்
-
சபாநாயகரை வசை பாடிய காங்கிரஸ் எம்பிக்கள்: வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட மத்திய அமைச்சர்
-
எங்கள் சாதனைகளை நாங்கள் தான் முறியடிப்போம்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
-
அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட முயற்சி; ராமதாஸ் 'திடுக்'!
-
நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம்