டில்லி ஏ.ஐ., மாநாட்டில் பங்கேற்கிறார் பிரேசில் அதிபர்
புதுடில்லி: டில்லியில் வரும் 16 முதல் 20ம் தேதி வரை நடக்க உள்ள, 'இந்தியா ஏ.ஐ., இம்பாக்ட் சம்மிட் 2026' என்ற செயற்கை நுண்ணறிவு மாநாட்டில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உடன் பிரேசில் அதிபர் லுாலா டா சில்வாவும் பங்கேற்க உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
'இந்தியா ஏ.ஐ., இம்பாக்ட் சம்மிட் 2026' மாநாடு, வரும் 16 முதல் 20 வரை டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில், 19ல் பிரதமர் மோடி முக்கிய அமர்வில் உரையாற்ற உள்ளார்.
'கூகுள்' தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, 'ஓபன் ஏ.ஐ.,' நிறுவனர் சாம் ஆல்ட்மேன், 'என்விடியா' தலைவர் ஜென்சன் ஹுவாங், 'டீப் மைண்ட்' தலைவர் டெமிஸ் ஹசாபிஸ், 'மைக்ரோசாப்ட்' தலைவர் பிராட் ஸ்மித் உள்ளிட்ட பல உலக தொழில்நுட்ப நிறுவன தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
'உலகம், மக்கள், வளர்ச்சி' என்ற மூன்று தளங்களின் அடிப்படையில் இந்த மாநாடு வடிவமைக்கப்பட்டு உள்ளது. திறன் மேம்பாடு, சமூக உள்ளடக்கம், ஏ.ஐ., பாதுகாப்பு, அறிவியல் ஆய்வு உள்ளிட்ட ஏழு துறைகள் விவாதிக்கப்பட உள்ளன.
இந்த மாநாட்டில், ஐரோப்பிய நாடான பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பங்கேற்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, தென் அமெரிக்க நாடான பிரேசிலின் அதிபர் லுாலா டா சில்டாவும் பங்கேற்க உள்ளதாக நம் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும்
-
'ஏட்டைய்யா விசாரிப்பு' முறையை மீண்டும் அமல்படுத்துங்கள்!
-
மதுரை - துாத்துக்குடி காரிடார் திட்டம் வருமா தென் மாவட்ட தொழில்துறையினர் எதிர்பார்ப்பு
-
திமுக அமைச்சர் ராஜ கண்ணப்பன் தோல்வியை கூறி காங்., பதிலடி
-
வேலம்மாள் மருத்துவக் கல்லுாரியில் செஸ் பயிற்சி முகாம் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் துவக்கி வைத்தார்
-
கன்னியாகுமரிக்கு சிவராத்திரி சிறப்பு ரயில்
-
மதுரையில் 140 அடி வ.உ.சி.,சிலை பிப்.22ல் துணை ஜனாதிபதி அடிக்கல் நாட்டுகிறார்