மதுரையில் 140 அடி வ.உ.சி.,சிலை பிப்.22ல் துணை ஜனாதிபதி அடிக்கல் நாட்டுகிறார்
மதுரை: மதுரையில் அமையவுள்ள வ.உ. சிதம்பரம் பிள்ளையின் 140 அடி உயர சிலைக்கு பிப்.,22ல் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டுகிறார் என புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்தார்.
மதுரையில் அவர் மேலும் கூறியதாவது: தியாகி வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு 140 அடி உயரத்தில் சிலை கப்பலுாரில் 2.5 ஏக்கரில் அமையவுள்ளது.
இதற்காக தனியார் கல்லுாரி இடம் வழங்கி யுள்ளது. சிலை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டுவிழா வண்டியூர் அம்மா திடலில் பிப்.,22ல் நடக்கிறது.
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டுகிறார்.
சிலை அமையும் பகுதியில் நுாலகம், பூங்கா உள்ளிட்டவை ஏற்படுத்தப்படும். சிலை முகத்தை பார்க்கும் வண்ணம் இரண்டு 'லிப்ட்'டுகள் அமைக்கப்படும். ரூ.10 கோடியில் 15 மாதங்களில் இச்சிலை அமைக்கப்படவுள்ளது. பிரதமர் மோடி திறந்து வைப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
புதிய பிரதமர் அலுவலகத்தை திறந்து வைத்தார் மோடி
-
பிளவுபடுத்தும் அரசியலை செய்யும் ராகுல்; மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சாடல்
-
விஜய் பிரசாரத்தில் மீண்டும் அசம்பாவிதம் : சேலம் கூட்டத்தில் மயங்கி விழுந்து ஒருவர் பலி
-
உங்களுக்கு ஸ்டாலின் வேண்டுமா? விஜய் வேண்டுமா? கேட்கிறார் விஜய்
-
ராகுலுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் இல்லை; மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ
-
உங்கள் கடமையை மனசாட்சியோடு செய்யுங்கள்: அரசு ஊழியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை