ஆள் கடத்தல் வழக்கில் ரவுடி கானாவுக்கு முன்ஜாமின்
நொய்டா : பிரபல ரவுடி கானா என்ற ரவி நாகருக்கு, முன்ஜாமின் வழங்கி, கோர்ட் நேற்று உத்தரவிட்டது.
ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு, பாண்டா சி றையில் அடைக்கப்பட்டிருந்த ரவுடி கானா, கடந்த மாதம், 19ல் கோர்ட் உத்தரவு படி விடுதலை செய்யப்பட்டார். முன்ஜாமின் வழங்கக் கோ ரி, கவுதமபுத்தா நகர் கோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கில், பல நிபந்தனைகளை விதித்த கோர்ட், ரவுடியை முன்ஜாமினில் விடுதலை செய்ய உத்தரவிட்டது. அதற்காக, '35 ஆயிரம் ரூபாய் ரொக்க ஜாமின் வழங்க வேண்டும். டில்லி மற்றும் சுற்றுப்புறத்தை விட்டு வெளியேற கூடாது. நீதிமன்றத்தின் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது' என பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
எனினும், நீதிமன்றத்தில் ஆள் கடத்தல் வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், ரவுடி கானாவுக்கு முன்ஜாமின் வழங்கப்படுவதால், அதுகுறித்து பதிலளிக்குமாறு, பாண்டா நகர சிறை அதிகாரிக்கு கோர்ட் உத்தரவிட்டது.
மேலும்
-
ராகுல் தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார்; மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு
-
சலுகை விலையில் வீடு, மனை வாங்க வழிகாட்டும் கூட்டுறவு சங்கங்கள்!
-
விற்காத வீடுகள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வது ஏன்?
-
புதிய கட்டடத்தின் சுவர்களில் மேற்பூச்சு உதிர்வது ஏன்?
-
நிலத்தின் தன்மையை ஆராயாமல் கட்டுமான பணிகளை துவங்காதீர்!
-
துாண்களில் நீராற்றும் பணியை மேற்கொள்வதில் கவனிக்க...