'கட்டிங்' உதவியாளருக்கு 'கல்தா' கொடுத்த அமைச்சர்!
''வி ண்ணப்பிச்சதுமே அனுமதி தந்துடறா ஓய்...'' என்றபடியே, நண்பர்கள் நடுவில் அமர்ந்தார் குப்பண்ணா.
''எந்த துறையில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''தமிழகத்துல வீட்டு மனைகளுக்கான, 'லே அவுட்' போடவும், வீடுகள் கட்டவும், நகர ஊரமைப்பு துறையிடம் அனுமதி வாங்கணுமோல்லியோ... இப்ப தேர்தல் நெருங்குறதால, நகர ஊரமைப்பு துறையின் சென்னை அலுவலகத்துல இருந்து, எல்லா மாவட்டங்களுக்கும் ஒரு உத்தரவு போயிருக்கு ஓய்...
''அதாவது, 'மனைகள், வீடுகளுக்கான விண்ணப்பங்களை, உடனுக்குடன் பைசல் பண்ணிடணும்... கூடுதலா எந்த பணமும் வசூலிக்க கூடாது'ன்னு சொல்லியிருக்கா ஓய்...
''அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தொழில் நகரான ஓசூர்ல, வீடுகள் கட்டவும், லே அவுட்களுக்கும் அதிகாரிகள் உடனுக்குடன் அனுமதி குடுத்துடறா... 'கட்டிங்' எதுவும் கேக்கறது இல்ல... 'எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு'ன்னு மக்களும் உற்சாகத்துல இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''அணைக்கட்டு தொகுதி அக்கப்போரை கேளுங்க வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''வேலுார் மாவட்டம், அணைக்கட்டு தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., நந்தகுமார், இங்க ரெண்டாவது முறையா எம்.எல்.ஏ.,வா இருக்காரு... மூணாவது முறையா போட்டியிட விரும்புதாரு வே...
''இதுக்காக, கடையில் நந்தகுமார் டீ குடிக்கிறது, மக்கள் பிரச்னைகள் சம்பந்தமா அதிகாரிகளுடன் பேசுற வீடியோக்களை சமூக வலைதளங்கள்ல, அவரது ஆதரவாளர்கள் பரப்பிட்டு இருக்காவ... சமீபத்துல, 'யு டியூப்' சேனலுக்கு பேட்டி தந்த நந்தகுமார், 'என் தொகுதியில், 100ல் அஞ்சு பேர் என்னை குறை சொன்னாக்கூட, தொகுதி பக்கம் வரமாட்டேன்'னு சவால் விட்டிருந்தாரு வே...
''உடனே களமிறங்கிய அ.தி.மு.க.,வினர், 'எம்.எல்.ஏ., ஓட்டு கேட்டப்ப தான் வந்தார்... அப்புறம் அவரை பார்க்கவே இல்ல'ன்னு சிலரிடம் பேட்டி எடுத்து, 'நடிப்பு அரக்கன்' என்ற பெயர்ல சமூக வலைதளங்கள்ல வீடியோக்களை பரப்பினாவ... இதனால, கடுப்பான எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள், பேட்டி தந்தவங்களை போய் மிரட்டியிருக்காவ வே...
''அதோட, 'நாங்க படிக்காதவங்க... அ.தி.மு.க.,வினர் எங்களை ஏமாத்தி பேட்டி எடுத்துட்டாங்க'ன்னும் வீடியோவுல பேச வச்சு, பரப்பிட்டு இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''உதவியாளரை துரத்தி அடிச்சிட்டாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.
''இளம் அமைச்சரின் பர்சனல் பி.ஏ.,வா, தே.மு.தி.க., 'மாஜி' எம்.எல்.ஏ., ஒருத்தர் இருந்தாரு... அமைச்சரின் பெயரை சொல்லி, நிறைய 'டிரான்ஸ்பர்'களை போட்டு, கட்டிங் வசூல் செஞ்சாருங்க...
''இதுக்காகவே, சென்னை, தேனாம்பேட்டையில் தனி ஆபீசே போட்டிருந்தாரு... இது பெரிய பிரச்னையாக, டிரான்ஸ்பர் விவகாரங்களை கவனிக்கிற பொறுப்பை, அவரிடம் இருந்து அதிரடியா பறிச்சிட்டாங்க...
''இந்த சூழல்ல, மதுரையில் அமைச்சர் தியாகராஜனின் முன்னாள் பி.ஏ.,க்கள் சிலர், முறைகேடு புகார்ல வரிசையா சிக்குறாங்களே... இதை பார்த்த அமைச்சர், தனது வசூல் பி.ஏ.,வையும், 'சென்னையிலயே இருக்காதீங்க... இடத்தை காலி பண்ணுங்க'ன்னு சொல்லி, சொந்த ஊருக்கே அனுப்பிட்டாருங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
''வாங்க, முத்துகுமார்... இப்ப, நீங்க மகேஷ்கிட்ட இல்லையா பா...'' என, நண்பரிடம் அன்வர்பாய் விசாரிக்க, மற்றவர்கள் கிளம்பினர்.
பி. ஏ க்கள் கலெக்ஷன் ஏஜெண்டுகளாக பணியாற்றி அமைச்சருக்கு உதவும் வரை தேவைப்படுவார்கள் அவர்களுக்கு 'புறங்கையை நக்க' ஆரம்பித்தால் அமைச்சரால் பொறுக்க முடியுமா?மேலும்
-
வனத்துறையினருக்கு கொலை மிரட்டல் விடுத்த கிரஷர் ஊழியர்கள்; விசாரணைக்கு அழைத்து சென்றதால் பரபரப்பு
-
ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும்: அரசு ஊழியர் சங்கம் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம்
-
வெவ்வேறு இடத்தில் சாலை விபத்து ; எலக்ட்ரீஷியன் உட்பட 4 பேர் பலி
-
காரில் 3 பவுன் நகை திருட்டு; தம்பதி மீது போலீசார் வழக்கு
-
200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
-
அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் கறுப்பு உடையணிந்து காத்திருப்பு போராட்டம்