ஊழியர் ஓய்வூதியம் பெற்றாலும் பணிக்கொடையை வழங்க மறுக்க முடியாது சென்னை உயர் நீதிமன்றம்
ஒ ரு ஊழியர் ஓய்வூதியம் பெறுகிறார் என்ற காரணத்தால் மட்டும், அவருக்கான சட்டப்பூர்வ பணிக்கொடை தொகையை நிறுவனம் மறுக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. சம்பளம் பெறும் ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கும் இந்த தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
இதுகுறித்து தொழிலாளர் மற்றும் மனிதவள நிபுணர்கள் கூறியதாவது:
“ஓய்வூதியம் பெறுவது பணிக்கொடை உரிமையை பாதிக்காது. நிறுவனங்களின் உள் விதிமுறைகள் அல்லது தனியார் திட்டங்கள், சட்டப்பூர்வ நன்மைகளை மாற்ற முடியாது. பணிக்கொடைக்கு பதிலாக வேறு திட்டம் அமல்படுத்த விரும்பினால், அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அனுமதி அவசியம்.
ஓய்வூதிய திட்டமிடலில் பணிக்கொடை பாதுகாப்பான, உறுதியான நன்மை என்பதை இந்த தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்துகிறது.”
நீதிமன்றத்தின்
முக்கிய 3 கருத்துகள்
1 பணிக்கொடை ஓய்வு பெறும் போது வழங்க வேண்டிய அதிகாரப்பூர்வ தொகை.
2 ஒரு நிறுவனம் தனியாக ஓய்வூதிய திட்டத்தை கொண்டிருந்தாலும், அது பணிக்கொடைக்கு பதிலாக கருதப்படாது.
3 'பணிக்கொடை சட்டம் 1972' பிரிவு 5ன் கீழ் உரிய அரசாங்கத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ விலக்கு பெற்றிருந்தால் மட்டுமே, பணிக்கொடையை வழங்காமல் இருக்கலாம்.
மேலும்
-
'ஏட்டைய்யா விசாரிப்பு' முறையை மீண்டும் அமல்படுத்துங்கள்!
-
மதுரை - துாத்துக்குடி காரிடார் திட்டம் வருமா தென் மாவட்ட தொழில்துறையினர் எதிர்பார்ப்பு
-
திமுக அமைச்சர் ராஜ கண்ணப்பன் தோல்வியை கூறி காங்., பதிலடி
-
வேலம்மாள் மருத்துவக் கல்லுாரியில் செஸ் பயிற்சி முகாம் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் துவக்கி வைத்தார்
-
கன்னியாகுமரிக்கு சிவராத்திரி சிறப்பு ரயில்
-
மதுரையில் 140 அடி வ.உ.சி.,சிலை பிப்.22ல் துணை ஜனாதிபதி அடிக்கல் நாட்டுகிறார்