உயர்ந்த இதழியல் அறம்

75 ஆண்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய தினமலருக்கு இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!

தமிழர் நாகரிகத்தின் ஒருங்கிணைந்த அங்கமான பக்தி கலாச்சாரத்தை பாதுகாத்து மேம்படுத்துவதில் 'தினமலர்' ஆற்றிய பங்கு மிக முக்கியமானது.

மொத்த உலகமும் பாரதத்தின் நாகரிக வளத்தினால் உண்மையிலேயே பயனடையக்கூடிய இந்தக் காலகட்டத்தில், இந்த மரபினை உயர்த்திப் பிடித்து, அதை சம காலத்திற்கு ஏற்றவாறு பொருத்தமான முறையில் வாசகர்களுக்கு வழங்கும் தினமலரின் பங்களிப்பு அளப்பரியது.

தினமலரின் பாணி, உள்ளடக்கம் மற்றும் இதழியல் தரநிலையை நம்பும் வாசகர்களுக்கு அந்நாளிதழ் வழங்கும் தரம் மற்றும் பன்முகத்தன்மை அற்புதமானது.

அரசியல் மற்றும் சமூக போக்குகளால் பாதிக்கப்படாமல், மிக உயர்ந்த இதழியல் அறத்தை தினமலர் குழுமம் தொடர்ந்து கடைபிடிக்க எனது ஆசிகளும், நல்வாழ்த்துகளும்.

-சத்குரு, ஈஷா அறக்கட்டளை நிறுவனர்.

Advertisement