சித்தாண்டீஸ்வரர் கோவிலில் 15ல் மஹா சிவராத்திரி விழா
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, சித்தாண்டீஸ்வரர் கோவிலில் மஹா சிவராத்திரி விழா வரும், 15ம் தேதி நடக்கிறது.
பொள்ளாச்சி அருகே, சிங்காநல்லுாரில் உள்ள, ேஷாடச மகாலிங்க சித்தாண்டீஸ்வரர் கோவிலில், மஹா சிவராத்திரி விழா, நாளை மாலை, 3:00 மணி முதல் இரவு, 7:00 மணிக்கு சனிப்பிரதோஷ பூஜையுடன் துவங்குகிறது.
வரும், 15ம் தேதி காலை, 10:00 மணிக்கு தெய்வகுளம் காளியம்மன் கோவிலுக்கு தீர்த்ததுக்கு புறப்படுதல், மாலை, 4:00 மணிக்கு தீர்த்தம் கோவில் வந்தடைதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சியும், இரவு, 9:00 மணிக்கு முதல் கால அபிேஷகம், இரவு, 10:00 மணிக்கு ஒயில் கும்மியாட்டம் நடக்கிறது.
நள்ளிரவு, 12:00 மணிக்கு இரண்டாம் கால அபிேஷகம், வரும், 16ம் தேதி அதிகாலை, 3:00 மணிக்கு மூன்றாம் கால அபிேஷகம், காலை, 4:00 மணிக்கு மணிவாசகரும், திருவாசகமும் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடக்கிறது.
காலை, 5:30 மணிக்கு நான்காம் கால அபிேஷகம், 6:30 மணிக்கு பள்ளய பூஜை, காலை, 10:00 மணிக்கு உலக வேள்விக்குழு நடத்தும் ஆன்மிக இசைக்கலை விழா, காலை, 10:30 மணிக்கு மஹா அபிேஷகம், மதியம் மஹா அலங்காரம், மஹா தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது.
அன்று, காலை, 8:00 மணி முதல் மாலை, 3:00 மணி வரை அன்னதானம் நடக்கிறது. வரும், 17ம் தேதி காலை, 11:00 மணி முதல் மாலை, 3:00 மணி வரை அமாவாசை பூஜை நடக்கிறது.
மேலும்
-
'ஏட்டைய்யா விசாரிப்பு' முறையை மீண்டும் அமல்படுத்துங்கள்!
-
மதுரை - துாத்துக்குடி காரிடார் திட்டம் வருமா தென் மாவட்ட தொழில்துறையினர் எதிர்பார்ப்பு
-
திமுக அமைச்சர் ராஜ கண்ணப்பன் தோல்வியை கூறி காங்., பதிலடி
-
வேலம்மாள் மருத்துவக் கல்லுாரியில் செஸ் பயிற்சி முகாம் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் துவக்கி வைத்தார்
-
கன்னியாகுமரிக்கு சிவராத்திரி சிறப்பு ரயில்
-
மதுரையில் 140 அடி வ.உ.சி.,சிலை பிப்.22ல் துணை ஜனாதிபதி அடிக்கல் நாட்டுகிறார்