ருத்ரகோடீஸ்வரர் கோயில் மாசி திருவிழா
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சதுர்வேதமங்கலம் ஆத்மநாயகி ருத்ர கோடீஸ்வரர் கோயில் மாசி திருவிழா பிப். 21 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
குன்றக்குடி ஆதீனத்துக்கு உட்பட்ட, இக்கோயிலின் மாசித்திருவிழா பிப். 21 ம் தேதி காலை 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று இரவு 7:00 மணிக்கு அரளிப்பாறை தண்டாயுதபாணி சுவாமி கோயிலிலும் கொடியேற்றம் நடைபெறும்.
பத்து நாட்கள் நடக்கும் விழாவில் தினமும் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கும். பிப்., 25ல் ஆத்மநாயகி ருத்ர கோடீஸ்வரர் திருக்கல்யாணம், பிப். 26 ல் கழுவன் திருவிழா, சமணர்களுக்கு சாப விமோசனம் நடக்கும். மார்ச் 1 ல் மாசி தேரோட்டமும், மார்ச் 2 ல் தீர்த்தவாரியும் நடைபெறும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புதிய பிரதமர் அலுவலகத்தை திறந்து வைத்தார் மோடி
-
பிளவுபடுத்தும் அரசியலை செய்யும் ராகுல்; மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சாடல்
-
விஜய் பிரசாரத்தில் மீண்டும் அசம்பாவிதம் : சேலம் கூட்டத்தில் மயங்கி விழுந்து ஒருவர் பலி
-
உங்களுக்கு ஸ்டாலின் வேண்டுமா? விஜய் வேண்டுமா? கேட்கிறார் விஜய்
-
ராகுலுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் இல்லை; மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ
-
உங்கள் கடமையை மனசாட்சியோடு செய்யுங்கள்: அரசு ஊழியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை
Advertisement
Advertisement