இ-சேவை மைய ஆபரேட்டர்கள் ஸ்டிரைக் பொதுமக்கள் அவதி

திருப்புத்தூர்: தமிழகமெங்கும் இ- --சேவை மைய ஆபரேட்டர்கள் பணி நிரந்தரம், சம்பளம் நிர்ணயம் கோரி நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

மாநில அளவில் இ-சேவை, ஆதார் மையங்களில் 600 ஆப்பரேட்டர்கள் பணிபுரிகின்றனர். ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.8 ஆயிரம் சம்பளம் பெறுகின்றனர். தொடர்ந்து பணி நிரந்தரம், ஆண்டு தோறும் மாதம் ரூ.500 சம்பள உயர்வு என்ற எதிர்பார்ப்பில் பணிபுரிந்து வந்தனர்.

மையங்களுக்கு வரும் வருவாய் அடிப்படையில் சம்பளம் குறைப்பு செய்வதை கண்டிக்கின்றனர். தொடர்ந்து ஆப்பரேட்டர்களை பணிநிரந்தரம்செய்ய வேண்டும். உரிய சம்பளம், சேமநல நிதி அளிக்கவேண்டும் என வலியுறுத்தி ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால், நேற்று பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

Advertisement