ரோஜா பூங்காவில் புரூனிங் பணி துவக்கம்
ஊட்டி: ஊட்டியில் கோடை சீசனுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அங்குள்ள ரோஜா பூங்காவில் புரூனிங் செய்யும் பணி துவங்கியது.
ஊட்டி ரோஜா பூங்காவில், 30,000-க்கும் அதிகமான ரோஜா செடிகள் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் ஏப்., மே மாதங்களில் நீலகிரியில் கோடை சீசன் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக ரோஜா செடிகளை புரூனிங் செய்யும் பணி கலெக்டர் லட்சுமி பவ்யா துவக்கி வைத்தார். புரூனிங் செய்த செடிகளில் இருந்த ரோஜா மலர்களை பணியாளர்கள் சேகரித்தனர்.
தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறுகையில், ''ஆண்டு தோறும் ரோஜா பூங்காவிற்கு அதிகபட்சமாக, 10 லட்சம் பேர் வரை வருகின்றனர். ரோஜா பூங்காவில் கடந்த ஆண்டு கூடுதலாக, 100 ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது,'' என்றார்
நிகழ்ச்சியில் தோட்டக்கலை இணை இயக்குனர் நவநீதா, துணை இயக்குனர் பெபிதா, உதவி இயக்குனர்கள் பெரோஸ்கான், ஜெயந்தி பிரேம்குமார், தோட்டக்கலை துறை அலுவலர்கள் மேனகா, செல்வகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
புதிய பிரதமர் அலுவலகத்தை திறந்து வைத்தார் மோடி
-
பிளவுபடுத்தும் அரசியலை செய்யும் ராகுல்; மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சாடல்
-
விஜய் பிரசாரத்தில் மீண்டும் அசம்பாவிதம் : சேலம் கூட்டத்தில் மயங்கி விழுந்து ஒருவர் பலி
-
உங்களுக்கு ஸ்டாலின் வேண்டுமா? விஜய் வேண்டுமா? கேட்கிறார் விஜய்
-
ராகுலுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் இல்லை; மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ
-
உங்கள் கடமையை மனசாட்சியோடு செய்யுங்கள்: அரசு ஊழியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை