ராமாயண தொடர் இயக்குநர் ஆனந்த் சாகர் காலமானார்
மும்பை: 'ராமாயணம்' 'டிவி' தொடர் மூலம் புகழ்பெற்ற தயாரிப்பாளர் ராமானந்த் சாகரின் மகன் ஆனந்த் சாகர் சோப்ரா, 84, உடல்நலக்குறைவால் மும்பையில் நேற்று முன்தினம் காலமானார்.
மஹாராஷ்டிராவின் மும்பையில் வசித்த ஆனந்த் சாகர், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக, 'பார்கின்சன்ஸ்' எனப்படும், நரம்பியல் நோயால் பாதிக்கப் பட்டிருந்தார்.
நோயின் தாக்கம் முற்றியதால், உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்று முன்தினம் உயிரிழந்ததாக அவரது மனைவி நிஷா தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், “நீண்ட காலமாக பார்கின்சன்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்கு உரிய சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தார். எனினும், கடந்த சில மாதங்களாக அவரது உடலில் தொற்று ஏற்பட்டது. இது, ஆனந்தின் உடல்நிலையை மேலும் மோசமாக்கியது.
' 'கடந்த இரண்டு மாதங்களாக படுத்தப் படுக் கையாக இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 10:37 மணிக்கு அவர் உயி ரிழந்தார். இது, அனைவருக்கும் பெரிய இழப்பு,” என்றார்.
இதைத்தொடர்ந்து, மும்பையின் புறநகர்ப் பகுதியில் உள்ள பவன் ஹான்ஸ் தகனக்கூடத்தில் ஆனந்த் சாகரின் உடல் நேற்று முன்தினம் எரியூட்டப்பட்டது. அவருக்கு மூன்று பிள்ளைகள்.
தன் தந்தை ராமானந்த் சாகரின் பணியை தொடர்ந்து மேற்கொண்ட ஆனந்த் சாகர், ராமாயணம், ஷீரடி சாய்பாபா உட்பட பல 'டிவி' தொடர்களை இயக்கியுள்ளார்.