சத்துணவு ஊழியர்கள் ஊர்வலம்: 3 பேர் மயக்கம்
சிவகங்கை: சிவகங்கையில் சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் 12வது நாளாக நேற்று காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயிலில் இருந்து அரண்மனை வரை ஊர்வலம் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். அதனால் போலீசாருக்கும் அங்கன்வாடி ஊழியர்களுக்கும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
போலீசாரின் தடுப்புகளை மீறி அங்கன்வாடி சங்கத்தினர் ரோட்டில் ஓட தொடங்கினர்.
இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் பழைய நீதிமன்ற சந்திப்பில் ஊர்வலமாக சென்றவர்களை மறைத்தனர்.
அப்போது மீண்டும் போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதில் பொதுச்செயலாளர் வாசுகி, மாநில துணைத்தலைவர் மிக்கேலம்மாள், சண்முகலெட்சுமி உள்ளிட்டோர் மயங்கி விழுந்தனர்.
அவர்களை சக ஊழியர்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர்.
போலீசார் தடுத்ததால் ராமச்சந்திர பூங்கா அருகே ரோட்டில் அமர்ந்து அங்கன்வாடி பணியாளர்கள் போலீசாருக்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.
மதியம் 1:30 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்னர் கலைந்து சென்றனர்.
மேலும்
-
மீண்டும் கைகுலுக்காத சூர்யா; பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்டிங்
-
சென்னையில் வள்ளலார் ஆய்வு மையம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
வங்கதேச புதிய பிரதமர் பதவியேற்பில் கலந்து கொள்கிறார் சபாநாயகர்; வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
-
ஏஐ உச்சி மாநாட்டை நடத்த இந்தியா சரியான இடம்; சொல்கிறது ஐநா
-
இமயமாய் நிமிர வேண்டிய நான் அதிமுகவோடு சேர்ந்ததால் படுபாதாளத்திற்கு போனேன்: வைகோ புலம்பல்
-
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மார்ச் 9 ல் விவாதம்: கிரண் ரிஜிஜூ