நமது வாழ்க்கை நெறிமுறை சனாதன தர்மம்: சத்குரு
கோவை: ''சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,'' என, சத்குரு பேசினார்.
கோவை ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி கொண்டாட்டங்கள் நேற்று நடந்தன. நிகழ்ச்சியில் சத்குரு பேசியதாவது:
மஹா சிவராத்திரி பல்வேறு மக்களால் பல்வேறு வடிவங்களில் கொண்டாடப்படுகிறது. சிவனும், பார்வதியும், ஒன்றிணைந்து அருள்புரியும் தினமே மஹா சிவராத்திரியாக பார்க்கப்படுகிறது. அனைத்து எதிரிகளையும் ஒழிக்கும் தினம். வாழ்வில் அனைத்து விஷயங்களையும் வெல்ல வழி வகுக்கும் நாளாக உள்ளது.
துாக்கம் போல் இறப்பையும் நம்மால் தடுக்க முடியாது. எதுவும் நேர்கோட்டில் இருந்தால் அது சிறப்பாக இருக்காது. ஒவ்வொருவரின் அனுபவமும் தொடர்ந்து கொண்டே உள்ளது.
இது ஒரு சுற்று போல் நடந்து கொண்டுள்ளது. காலம் மாறிக் கொண்டே உள்ளது. அதனுடன் நாம் இணைந்து செல்வது அவசியம். அனைவரும் உயிர்ப்புடன் இருக்க வேண்டும். எண்ணங்கள் உயிர்ப்புடன் இருந்தால் மட்டுமே நலமாக இருக்க முடியும். காலத்தை வெல்வது சாதனை அல்ல.
கடந்த, 80 ஆண்டுளாக பல்வேறு காரணங்களால் ஆன்மிக நடவடிக்கைகளை நாம் மறந்து விட்டோம். தலைமுறை இடைவெளி அதிகரித்து வருகிறது. வரும் கால தலைமுறை நம் கலாசாரம், ஆன்மிகம் குறித்து தெரிவிப்பதை நம்ப மறுக்கின்றனர். ஆன்மிகம் என வரும்போது எந்த ஒரு கேள்வியும் இருக்கக் கூடாது. ஆனால், இன்றைய தலைமுறையினர் ஒவ்வொன்றிலும் கேள்வி எழுப்புகின்றனர்.
நாகரிகம் மாறிக் கொண்டுள்ளது. இந்த நாகரிகத்தை நாம் சனாதனம் என்கிறோம். இந்து என்பதற்காக நாம் இதை நம்பவில்லை. இது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான நெறி. ஒவ்வொருவரின் யோசனையும் வித்தியாசமாக இருக்கும். சனாதன தர்மம் முற்றிலும் மாறுபட்டது. இவ்வாறு, அவர் பேசினார்.
தொடர்ந்து ஆதியோகி முன் உள்ள யோகேஸ்வர லிங்க ஸ்வரூபத்துக்கு, சத்குரு வில்வ பொடி, அரிசி பொடி, வில்வ இலை, வேப்பிலை கொண்ட மஹா அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை செய்தார்.
சத்குரு ஒரு எதார்த்தமான ஆன்மீக குரு. அறிவையும் ஆன்மீகத்தையும் சரியானபடி கலந்து இறைவனில் ஆனந்தமாய் வாழ்பவர். அவரே ஆன்மிகம் குறித்த கேள்விகளை எழுப்பி பொருத்தமான ஆன்மீக வாழ்வை தானும் வாழ்ந்து மக்களுக்கும் கற்றுக்கொடுப்பவர். இருந்தாலும் சனாதனம் குறித்து செய்தியில் படிக்கக்கிடைக்கும் அவரது கருத்து பொருத்தமாக இல்லை. சுருங்கச் சொல்லி விளக்கும் நிலையிலும் இல்லை.
சனாதன தர்மம் அனைத்து உயிர்களுக்கானது என்று புரியவைத்தார் சத்குரு, அதை அழிக்கவேண்டும் என்று நினைப்பவன் அடி முட்டாளாகத்தான் இருக்க முடியும்.
ஏன் குழப்பிவிட்டார்? என்றும் நிலையானது சனாதன தர்மம் என்று தானே சொல்லப்பட்டது. வேதங்கள் நிலையானது, ஆனால் ஸ்மிருதிகள் பல காலகட்டங்களில் மாற்றி அமைக்கப்பட வேண்டியது என்று சொல்லப்பட்டது. ஸ்மிருதியை திருத்தி புதியவை வெளியிடப்படாததே இப்போது இந்து மதத்திற்கு நெருடல். இந்துக்களில் 85% பேர் வேதம் சாராத சமயப்பிரிவுகளை சார்ந்தவர்கள் என்பதால் சனாதனம் இந்துக்களுக்கு பொதுவானதாக இருக்க முடியாது. சனாதனியாக ஆக ஒன்பது விஷயங்களை ஏற்கனும். உதாரணமாக, அதில் அஹிம்சா ஒன்று புலால் உண்பவர் சனாதனியாக முடியாது.
ஆன்மிகம் எல்லோரையும் அன்புடன் அரவணைத்தால் யார் கேள்வி கேட்பார்கள்? ஆன்மிகம் என்னும் போர்வையில் ஏற்றத்தாழ்வுகள் மக்களை பிரித்துப் பார்க்கும் போது கேள்வி கேட்காமல் இருக்க முடியுமா? பகுத்தறிவோடு ஆன்மீகமும் கலந்து மிதந்து வரும்போது கேள்விக்கு இடமில்லை.
மாறிக்கொண்டிருக்கும் நாகரீகமே சனாதனம் என்றால் சனாதனம் நிலையற்றது எனலாமா? மாறிக்கொண்டிருக்கும் உலகில் மாறாதிருக்கும் ஒன்றுதான் divine law. அது அண்ட சராசரத்துக்கு பொதுவானது. ஏற்கெனவே டிசைன் செய்தபடி நடந்து கொண்டே இருக்கும். அதுதான் சனாதனம் என்றால், இந்திய ஆன்மீகத்துக்கு மட்டும் சொந்தம் என்று கொண்டாட முடியுமா? நமக்கென்று ஒரு தர்மம் உண்டு. அப்படியானால் நமது இந்து சனாதனம் என்றால் எது?
ஆயிரக்கணக்கில் கட்டணம் கொடுத்து வருபவர்கள் ஆன்மீகத்தில் சந்தேகம் இருந்தால் கேள்வி கேட்கத் தானே செய்வார்கள்
அருமை. வாழ்த்துகள்.
மாறிக்கொண்டிருக்கும் நாகரீகமே சனாதனம் என்றால் சனாதனம் நிலையற்றது எனலாமா? மாறிக்கொண்டிருக்கும் உலகில் மாறாதிருக்கும் ஒன்றுது, சனாதனம் என்றால், இந்திய ஆன்மீகத்துக்கு மட்டும் சொந்தம் என்று கொண்டாடப்பட முடியுமா?மேலும்
-
விதிகளை மீறிய மேற்கு வங்க அதிகாரிகள் 7 பேர் சஸ்பெண்ட்; தேர்தல் ஆணையம் அதிரடி
-
த.வெ.க.,வுடன் கூட்டணி; காங்கிரசார் வலியுறுத்தல்
-
சுனைலிங்கம் ஜலகண்டேஸ்வரர் தரிசனம்
-
வீரட்டானேஸ்வரர் கோவிலில் சிவராத்திரி வழிபாடு
-
பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
-
விதிமீறும் வாகன ஓட்டுனர்கள் சுரங்கப்பாதையில் விபத்து அபாயம்