மலை கோவில்களில் சிவன் ராத்திரி விழா கோலாகலம்
-நிருபர் குழு-:
நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிவராத்திரி பெருவிழா கோலாகலமாக நடந்தது.
கோத்தகிரி அஜ்ஜூர் கிராமம் பாண லிங்கேஸ்வரர் திருக்கோவிலில், கடந்த, 14ம் தேதி மாலை, 4:00 மணிக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது. தொடர்ந்து, 15 தேதி மாலை, 3:00 மணிக்கு, முடிக் காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி, மாலை, 6:00 மணிக்கு, ஐந்து கால அபிஷேக அலங்கார பூஜை, அதிகாலை, 6:00 மணிக்கு, ஆராதனை பூஜை நடந்தது.
முக்கிய திருவிழா நாளான நேற்று முன்தினம் காலை, 7:00 மணி முதல் ஐயனின் அலங்கார பூஜை, காலை, 10:00 மணிக்கு அரக்கோல் ஆடல், பாடல் நிகழ்ச்சி இடம் பெற்றது. பகல் 12:30 மணிக்கு, ஸ்ரீ விநாயகர் திருத்தேர் கோவிலை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.
பகல், 2:00 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 5:00 மணிக்கு ஐயனை தொட்டமனை அழைத்து செல்லும்நிகழ்ச்சி இடம் பெற்றது. தொடர்ந்து, இரவு, 9:00 மணிக்கு, ஸ்ரீ கலைவாணி நாடக மன்றத்தாரின் ' மாணிக்கம்மா' என்ற சரித்திர நாடகம் நடந்தது.
விழாவில், சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல, தீனட்டி, கெச்சிகட்டி மற்றும் திம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் சிவன் ராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
* பந்தலுார் அருகே உப்பட்டி செந்துார் முருகன் கோவிலில், சிவராத்திரி முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. உப்பட்டி ஹட்டி பகுதியில் உள்ள சவுடேஸ்வரி அம்மன் திருக்கோவிலிலிருந்து, முருகன் கோவில் மகளிர் குழு சார்பில், திருவிளக்கு ஊர்வலம் உப்பட்டி பஜார் வழியாக வந்து, முருகன் கோவிலை சென்றடைந்தது. அங்கு சிறப்பு திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டு, இரவு சிறப்பு பூஜைகள் மற்றும் பிரார்த்தனைகள் நடந்தது. பூஜைகளை கோவில் அர்ச்சகர்கள் சுந்தர்ராஜா மற்றும் கருப்பையா ஆகியோர் செய்தனர்.
* குன்னுார் சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.வெலிங்டன் பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வெலிங்டன் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஜெகதளா மகாலிங்கேஸ்வர் கோவிலில், நான்கு கால பூஜைகள் நடந்தது. அம்பலத்தார் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்களின் பஜனை இடம் பெற்றது. நேற்று காலை சிவன் பார்வதி ஊர்வலம் நடந்தது. அன்னதானம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல்வேறு கோவில்களில் சிவன் ராத்திரி பெருவிழா கோலாகலமாக நடந்தது.
மேலும்
-
குஜராத், தமிழகத்தில் பல நீதிமன்றங்களுக்கு இமெயிலில் வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் சோதனை
-
விலையில்லா சைக்கிள் வீண்: மலை பகுதிக்கு மாற்று திட்டம் தேவை
-
சிவராத்திரி விழா; பாதக்கொரடு அணிந்து ஊர்வலம்
-
நகை அடகுக்கடை ஷட்டர் உடைப்பு: 40 பவுன் நகை, 5 கிலோ வெள்ளி கொள்ளை
-
'பள்ளமில்லா சாலை' திட்டம்: முழுமையான பலன் இல்லை
-
'நீட்' தேர்வுக்கு பின் பிளஸ் 2 ரிசல்ட்: மாணவர்கள் நிம்மதி