ஊராட்சி துவக்க பள்ளியின் 55வது ஆண்டு விழா
கூடலுார்: கூடலுார் ஓவேலி ஆருட்டுப்பாறை ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியின் 55வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
ஆசிரியை ரெஜினா மேரி வரவேற்றார். ஆசிரியர் சிவக்குமார் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் மக்காரு ஆண்டு அறிக்கை வாசித்தார். ஓவேலி பேரூராட்சி துணை தலைவர் சகாதேவன், கவுன்சிலர்கள் செல்வி, முருகம்மா உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். தொடர்ந்து நடந்த மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தது. விழாவில், ஓய்வு பெறும் பள்ளி தலைமை ஆசிரியரின் பணியை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து, மூத்த குடிமக்கள் கவுரவிக்கப்பட்டனர். விழாவில் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் சதாசிவம், ராஜசேகர், ஆசிரியர்கள், பெற்றோர் மாணவர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குஜராத், தமிழகத்தில் பல நீதிமன்றங்களுக்கு இமெயிலில் வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் சோதனை
-
விலையில்லா சைக்கிள் வீண்: மலை பகுதிக்கு மாற்று திட்டம் தேவை
-
சிவராத்திரி விழா; பாதக்கொரடு அணிந்து ஊர்வலம்
-
நகை அடகுக்கடை ஷட்டர் உடைப்பு: 40 பவுன் நகை, 5 கிலோ வெள்ளி கொள்ளை
-
'பள்ளமில்லா சாலை' திட்டம்: முழுமையான பலன் இல்லை
-
'நீட்' தேர்வுக்கு பின் பிளஸ் 2 ரிசல்ட்: மாணவர்கள் நிம்மதி
Advertisement
Advertisement