நேரு கம்பையை கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகம் கலெக்டர் அலுவலகம் முற்றுகையால் பரபரப்பு
ஊட்டி: ஊட்டி அருகே நேருகம்பை மக்கள் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தரக் கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட நேரு கம்பை கிராமத்தில், 120க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிக்கு குடிநீர் ஆதாரமாக கொதங்கட்டி பகுதியில் உள்ள நீராதாரத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.
சமீபகாலமாக குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதால் நோய் பரவும் அபாயத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து கேத்தி பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
சதுப்பு நிலத்தில் சுடுகாடு மேலும் , இப்பகுதி மக்களுக்கு கிராமத்தை ஒட்டி ஆற்றோரத்தில் சுடுகாடுக்கு, 2 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டது.
ஒதுக்கப்பட்ட இடம் விவசாய நிலமாகவும், சதுப்பு நிலமாக இருப்பதால் இறந்தவர்களை புதைக்க சிரமம் ஏற்பட்டு வந்துள்ளது. தவிர, அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாததால் கிராம மக்கள் பல முறை கேத்தி பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று கிராம பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மணிகண்டன் , கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, 'கோரிக்கைகள் குறித்து உடனடியாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, மக்கள் கலைந்து சென்றனர்.
கிராம மக்கள் கூறுகையில், 'கிராமத்தில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படாததால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண மனு அளித்துள்ளோம்,' என்றனர்.
மேலும்
-
குஜராத், தமிழகத்தில் பல நீதிமன்றங்களுக்கு இமெயிலில் வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் சோதனை
-
விலையில்லா சைக்கிள் வீண்: மலை பகுதிக்கு மாற்று திட்டம் தேவை
-
சிவராத்திரி விழா; பாதக்கொரடு அணிந்து ஊர்வலம்
-
நகை அடகுக்கடை ஷட்டர் உடைப்பு: 40 பவுன் நகை, 5 கிலோ வெள்ளி கொள்ளை
-
'பள்ளமில்லா சாலை' திட்டம்: முழுமையான பலன் இல்லை
-
'நீட்' தேர்வுக்கு பின் பிளஸ் 2 ரிசல்ட்: மாணவர்கள் நிம்மதி