'டவுட்' தனபாலு
தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி: 'பா.ஜ.,வின் கிளை கழகம் தான் அ.தி.மு.க., கட்சி; அதன் கிளை செயலர் தான் பழனிசாமி; ரெய்டுக்கு பயந்து, பா.ஜ.,வோடு கூட்டணியில் இருக்கிறார்' என்றெல்லாம் முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு, '2ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கில், கனிமொழியை கைது செய்தபோது, கூட்டணியில் தி.மு.க., நீடித்ததை விட கேவலம் ஏதாவது இருக்குமா.
டவுட் தனபாலு: கனிமொழி கைதானாலும், தி.மு.க., சார்பில் வளமான துறைகளில் பலர் மத்திய அமைச்சர்களா வலம் வந்தாங்களே... அதை இழக்க வேண்டாம்னு தான், அன்றைய மத்திய அரசில் தி.மு.க., நீடித்தது என்ற ராஜ தந்திரம் இவருக்கு புரியலையா என்ற, 'டவுட்' தான் வருது!
lll
இந்திய குடியரசு கட்சியின் தேசிய தலைவரும், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே: இந்திய குடியரசு கட்சி சார்பில் தமிழகத்தில், தே.ஜ., கூட்டணியில், 10 தொகுதிகள் கேட்டுள்ளோம். அவர்கள் ஒதுக்கீடு செய்யாவிட்டால், தலித் ஓட்டுகள் அதிகமுள்ள, 51 தொகுதிகளில் சுயேச்சையாக போட்டியிட உள்ளோம்; மீதமுள்ள தொகுதிகளில், தே.ஜ., கூட்டணிக்கு ஆதரவளிப்போம்.
டவுட் தனபாலு: மொத்தமா, 10 சீட்களை கேட்கிறீங்களே... நீங்களே 10 சீட்களை கேட்டா, நாட்டையே ஆளும் பா.ஜ.,வினர், 50 முதல் 60 சீட்களை தாங்கன்னு அ.தி.மு.க.,விடம் அடம் பிடிப்பாங்களே... 51 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு, விஜய் கட்சிக்கு கடும் போட்டியை உருவாக்க போறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
lll
பத்திரிகை செய்தி: ஈரோட்டில் நடந்த அரசு விழாவில், 5 கிலோ அரிசி, கருணாநிதி, ஸ்டாலின் படங்கள் உள்ள தட்டு ஆகியவற்றை மக்களுக்கு அமைச்சர் முத்துசாமி வழங்கினார். இது குறித்து கலெக்டர் கந்தசாமியிடம் நிருபர்கள் கேட்டபோது, 'தேர்தல் நடத்தை விதிமுறை தற்போது அமலில் இல்லை. விதிமுறை அமலில் இருந்தால், அமைச்சரை அப்படி செய்ய விடமாட்டோம். நானும் அரிசி பையை பார்த்தேன். அதில், தி.மு.க., விளம்பரம் இருந்தது. அந்த இடத்தில் எதையும் சொல்ல முடியவில்லை. இனி அதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்' என, பதிலளித்தார்.
டவுட் தனபாலு: அது சரி... கலெக்டரை மேடையில வச்சுக்கிட்டே, அரசு விழாவில் அப்பட்டமா ஆளுங்கட்சிக்கு ஓட்டு சேகரிச்சிருக்காங்களே... இதை கண்டித்து, அந்த விழாவில் இருந்து கலெக்டர் வெளியேறி இருந்தால், 'டவுட்' இல்லாம அவரை பாராட்டியிருக்கலாம்!
lll
கலெக்டருக்கு கூட கரை வேட்டி கொடுத்திருப்பார்களோ என்னவோ?
கலெக்டரை உசுப்பேத்தி வெளியேற்றம் செய்ய வலை பின்னுகிறீர்களோ என்ற டவுட்டு வருகிறது
பகுத்தறிவின் பாதுகாவலர்களான திமுக ராஜதந்திரம் என்ற பெயரில் பலி கொடுத்து வேண்டியதை பெற்றது சரியப்படலையே என்ற டவுட் வரவில்லையே? டவுட் அறிவு இன்னும் வளர்ச்சி பெறவேண்டும்மேலும்
-
குஜராத், தமிழகத்தில் பல நீதிமன்றங்களுக்கு இமெயிலில் வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் சோதனை
-
விலையில்லா சைக்கிள் வீண்: மலை பகுதிக்கு மாற்று திட்டம் தேவை
-
சிவராத்திரி விழா; பாதக்கொரடு அணிந்து ஊர்வலம்
-
நகை அடகுக்கடை ஷட்டர் உடைப்பு: 40 பவுன் நகை, 5 கிலோ வெள்ளி கொள்ளை
-
'பள்ளமில்லா சாலை' திட்டம்: முழுமையான பலன் இல்லை
-
'நீட்' தேர்வுக்கு பின் பிளஸ் 2 ரிசல்ட்: மாணவர்கள் நிம்மதி