ஏரி பகுதியில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமத்தினர் மனு

நாமக்கல்;முத்துக்காப்பட்டி ஏரி பகுதியில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி கிராம மக்கள், நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தியிடம் மனு அளித்தனர்.


இதுகுறித்து அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம், முத்துக்-காப்பட்டி கிராமத்தில், 120 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரி நீரை பயன்படுத்தி, 2,000 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. வடகி-ழக்கு பருவமழையின்போது, கொல்லிமலையில் பெய்யும் மழைநீர், காட்டாற்று வெள்ளமாக மாறி அடிவாரத்தில் உள்ள இந்த ஏரிக்கு தண்ணீர் வந்த-டைகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரமாக இந்த ஏரி உள்ளது. முக்கிய நீராதாரமான இந்த ஏரியின் மேற்கு கரையில், கல்குவாரி அமைந்தால், கரை வலுவிழந்து உறுதித்தன்மை குறைய வாய்ப்புள்ளது. கடந்த, 1975-76ல் இந்த ஏரியின் கரை உடைந்ததால், மூன்றாண்டுகள் அப்பகுதியில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்-பட்டது. பின் கரை சீரமைக்கப்பட்டது. இந்த ஏரி அமைந்துள்ள பகுதியில் கல்குவாரி அமைக்க டெண்டர் விடுவதால், ஏரி மோசமான நிலையை எட்ட வாய்ப்புள்ளது. இதனால், கல்கு-வாரி அமைக்க டெண்டர் விடும் திட்டத்தை கைவிட்டு, ஏரியை துார்வாரி, கரையை வலுப்ப-டுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்குவாரி அமைக்க முயற்சி செய்தால், அனைத்து விவ-சாய சங்கங்கள் மற்றும் பொதுநல ஆர்வலர்-களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement