மாநகராட்சி பட்ஜெட்டில் பற்றாக்குறை ரூ.126 கோடி; வரவு ரூ.4,915 கோடி; செலவு 5,041 கோடி
கோவை: மாநகராட்சியின் 2026-27ம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்ட அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யும் கூட்டம், விக்டோரியா ஹாலில் நேற்று நடந்தது.
பட்ஜெட் உரையை மேயர் வாசித்தார். வருவாய் - ரூ.4,915.50 கோடி, செலவு - ரூ.5,041.71 கோடி, ரூ.126.21 கோடி பற்றாக்குறை இருக்குமென கணக்கிடப்பட்டு உள்ளது. கடந்த நிதியாண்டு 139.83 கோடி பற்றாக்குறை சொல்லப்பட்டது. இப்போது, 13.62 கோடி குறைந்திருக்கிறது.
பல்வேறு தலைப்புகளின் கீழ், 202 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. தி.மு.க. மற்றும் கூட்டணி கவுன்சிலர்கள் வரவேற்று பேசினர். அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
ரூ.574 கோடி சொத்து வரி நிதிக்குழு தலைவர் முபஷீரா பேசியதாவது:
வரும் நிதியாண்டில் சொத்து வரியாக ரூ.573.71 கோடி, தொழில் வரி ரூ.62 கோடி எதிர்பார்க்கிறோம். முத்திரைத்தாள் மீதான வருவாய் 80 கோடி, மாநில அரசின் மூலதன மானியம் 300 கோடி, இதர இனங்கள் மூலமாக 1,076 கோடி கிடைக்கும். பணியாளர் ஊதியம், ஓய்வூதியம், நிறுவன செலவுக்கு 337 கோடி, நிர்வாக செலவுக்கு 94 கோடி, சாலை, கட்டடங்கள், பூங்காக்கள், பள்ளிகள், மயானம் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிக்கு ரூ.1,218 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
கடன்களுக்கு வட்டி செலுத்துவதற்காக ரூ.58,82 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. மூலதன செலவுக்காக அரசிடம் இருந்து ரூ.2,823 கோடி கிடைக்குமென மதிப்பிட்டுள்ளோம். பல்வேறு பணிகளுக்கு ரூ.3,327 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.
மேலும்
-
விலையில்லா சைக்கிள் வீண்: மலை பகுதிக்கு மாற்று திட்டம் தேவை
-
சிவராத்திரி விழா; பாதக்கொரடு அணிந்து ஊர்வலம்
-
நகை அடகுக்கடை ஷட்டர் உடைப்பு: 40 பவுன் நகை, 5 கிலோ வெள்ளி கொள்ளை
-
'பள்ளமில்லா சாலை' திட்டம்: முழுமையான பலன் இல்லை
-
'நீட்' தேர்வுக்கு பின் பிளஸ் 2 ரிசல்ட்: மாணவர்கள் நிம்மதி
-
மும்பையில் பிரதமர் மோடியை சந்தித்தார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்