மூட்டை கட்டி வீசப்படும் இறைச்சி கழிவு விபத்து அபாயத்தால் பொதுமக்கள் அச்சம்

மோகனுார்; 'வாகன போக்குவரத்து அதிகம் உள்ள சாலையில், இறைச்சி கழிவுகளை மூட்டை மூட்-டையாக கட்டி வீசி செல்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.


மோகனுாருக்கும், கரூர் மாவட்டம், வாங்க-லுக்கும் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே, உயர்மட்ட தரைவழிபாலம் அமைக்கப்பட்டுள்-ளது. இவ்வழியாக, தினமும் டூவீலர், கார், வேன், லாரி மற்றும் பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. அதனால், எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். இந்நிலையில், மோகனுார் டவுன் பஞ்.,க்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் இறைச்சி கடைகளின் கழிவுகள், மூட்டை மூட்டையாக கட்டி வந்து, சாலை-யோரம் வீசி செல்வதை வாடிக்கையாக கொண்-டுள்ளனர். அவ்வாறு கொட்டப்படும் கழிவுகளை, சுற்றித்திரியும் தெருநாய்கள் கடித்து குதறி சிதற-டிக்கின்றன. மேலும், தெருநாய்கள் சண்டையிட்-டுக்கொண்டு ஓடிவருவதால், அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
சிலமாதங்களுக்கு முன், இப்பகுதியில் ஆட்டுக்கு புல் சேகரிக்க சென்ற பெண், கார் விபத்தில் சிக்கி பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது. அதைய-டுத்து, மோகனுார் டவுன் பஞ்., சார்பில், 'எச்ச-ரிக்கை', இவ்விடத்தில் சாலை விபத்து இறப்பு நடந்துள்ளது. கவனமாக செல்லவும்' என, எச்ச-ரிக்கை பலகை அமைக்கப்பட்டுள்ளது. இதை சட்டை செய்யாத இறைச்சி கடைக்காரர்கள், தொடர்ந்து, கழிவுகளை மூட்டை மூட்டையாக கட்டி கொண்டுவந்து வீசி செல்கின்றனர். அசம்-பாவிதம் ஏற்படும் முன், இறைச்சி கழிவுகளை கொட்டுவதை தடுப்பதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது டவுன் பஞ்., நிர்வாகமும், போலீசாரும் நட-வடிக்கை எடுக்க
வேண்டியது அவசியம்.

Advertisement