தேர்தல் பணியில் களமிறங்கும் ஸ்டாலின் மகளிர் படையினர்
த மிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில், மீண்டும் வெற்றி பெற, தி.மு.க., கடந்த ஓராண்டாக தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.
சிதம்பரம் தொகுதியில், கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., நேரடியாக போட்டியிடாமல், கூட்டணி கட்சிக்கு விட்டுக்கொடுத்தது.
இந்த தேர்தலில் தி.மு.க., போட்டியிட தொகுதி நிர்வாகிகள் அக்கட்சி தலைமைக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். தொகுதி முழுவதும் ரேஷன் கார்டு வைத்துள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 'ஹாட் பாக்ஸ்' வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் பணியை தீவிரப்படுத்த கடந்த வாரம் ஒவ்வொரு பூத்திற்கும், ஸ்டாலின் மகளிர் படை உருவாக்கப்பட்டுள்ளது. மகளிர் படைக்கு ஒரு தலைவி உட்பட, 10 பேர் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் அனைவரும் வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கி, அரசு நிறைவேற்றியுள்ள நலத்திட்டங்களைவிளக்கி கூறி, பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஸ்டாலின் மகளிர் படையினர், தேர்தல் பணியை தீவிரப்படுத்த இன்னும் சில தினங்களில், சிதம்பரம் தொகுதியில் களத்தில் இறங்க தயாராகி வருகின்றனர்.