யாருடன் கூட்டணி? 26ல் இ.கு.க., அறிவிப்பு


சேலம்: சேலத்தில் இந்திய குடியரசு கட்சி மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று, நடந்தது. அதில் பங்கேற்ற பின், அக்கட்சி மாநில தலைவர் தமிழரசன் அளித்த பேட்டி:
தலித் மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கும் நிலையில், அரசியல் அதிகாரத்தில் இட ஒதுக்கீடு, 10 ஆண்டுக்கு ஒருமுறை லோக்சபாவில் அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. அது ஒப்பந்த அடிப்படையிலான அரசியல் ஒதுக்கீடாக இருக்கிறது.


அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஜனநாயக ரீதியில், தேர்தலில் எங்களுக்கு பிரதிநிதித்துவம் தேவை என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதனால் ஒவ்வொரு தேர்தலிலும் அதை பின்பற்றி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறோம். அதன்படி சட்டசபை தேர்தலிலும் பங்கு பெறுவோம். வரும், 26ல், சென்னையில் நடக்கும் செயற்குழு கூட்டத்தில், 2026 சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்து அறிவிப்போம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement