குழந்தைகளுக்கு 'ஏ' திரவம் 23ல் முகாம் தொடக்கம்


சேலம்: சேலம் மாவட்டத்தில், 6 மாதம் முதல், 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, 'வைட்டமின் ஏ' திரவம் வழங்கும் முகாம், வரும், 23, 24, 26, 27ல் நடக்க உள்ளது. இந்த திரவம், உயிர்ச்சத்து உடலுக்கு இன்றியமையாத ஊட்டச்சத்து. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில், இந்த திரவம் இலவசமாக வழங்கப்படும்.


பொது சுகாதாரம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட துறைகளை சேர்ந்த, 3,118 பணியாளர்கள், 459 அலுவலர்கள், இப்பணியில் ஈடுபடுவர். இதன்மூலம் மாவட்டத்தில், 2,47,031 குழந்தைகளுக்கு, 'ஏ' சொட்டு மருந்து வழங்கப்படும் என, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

Advertisement