2ம் நாளாக கிராம உதவியாளர் போராட்டம்

மேட்டூர்: தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம், மேட்டூர் கிளை சார்பில், காத்திருப்பு போராட்டம், 2ம் நாளாக நேற்று, அதே பகுதியில் நடந்தது. வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ரமேஷ் தொடங்கிவைத்தார்.



அதில் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்குதல்; ஓய்வூதிய திட்டத்தில் கிராம உதவியாளர்களை சேர்த்தல்; கிராம உதவி யாளர்களின் வாரிசு
களுக்கு கருணை அடிப்படையில் கல்வி தகுதிக்கு ஏற்ப பணி வழங்குதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தினர்.


வட்ட கிளை செயலர் வெற்றிவேல், அரசு ஊழியர் சங்க செயலர் சிங்கராயன், வருவாய் கிராம ஊழியர் சங்க கிளை தலைவர் ஈஸ்வரி, செயலர் முருகன் உள்பட, 30 பேர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அதேபோல் ஓமலுார் தாலுகா அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க, ஓமலுார் வட்டார தலைவர் குமார் தலைமையில், 2ம் நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது.
இடைப்பாடி தாலுகா அலுவலகம் முன், சங்ககிரி தாலுகா தலைவர் ராஜா தலைமையில் போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பாபு, செயலர் தங்கராஜ், துணை செயலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement