வார இறுதி நாளில் உயர்வை கண்டது; தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,080 அதிகரிப்பு
சென்னை: சென்னையில் இன்று (பிப்ரவரி 21) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2,080 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 260 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
சர்வதேச நிலவரங்களால், சில தினங்களாக, நம் நாட்டில் தங்கம் விலையில் ஏற்ற, இறக்க நிலை காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (பிப்ரவரி 19) ஆபரண தங்கம் கிராம், 14,500 ரூபாய்க்கும், சவரன், 1,16,000 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 270 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்றைய நிலவரம்
நேற்று (பிப்ரவரி 20), தங்கம் விலை, கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து, 14,420 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 640 ரூபாய் சரிவடைந்து, 1,15,360 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 270 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (பிப்ரவரி 21) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2,080 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 260 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
வெள்ளியும் உயர்வு
வெள்ளி விலை கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 290 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிலோவுக்கு 20 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்