பரோலில் சென்ற கைதி 'எஸ்கேப்
சேலம்: சேலம், கோரிமேட்டை சேர்ந்தவர் சிவக்குமார், 36. இவர், 2017ல் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியில் வழிப்பறியில் ஈடுபட்டதால் போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அந்த வழக்கில், 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை கைதியாக சிறையில் இருந்தார். நன்னடத்தை அடிப்படையில், 15 முறை பரோலில் சென்றிருந்தார்.
சில நாட்களுக்கு முன் மீண்டும் பரோல் கேட்டு விண்ணப்பித்தார். கடந்த, 13ல் பரோல் வழங்கி, 20ல் சிறைக்கு வர சிறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி சென்ற சிவக்குமார், நேற்று மாலை, சிறைக்கு வர வேண்டும். ஆனால் வெகுநேரமாகியும் சிவக்குமார் வராததால் சந்தேகம் அடைந்த சிறை கண்காணிப்பாளர் வினோத் விசாரித்தார். அதில் அவர் தலைமறைவானது தெரிந்தது. தொடர்ந்து வினோத் புகார்படி, கன்னங்
குறிச்சி போலீசார், சிவக்குமாரை தேடுகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக பதிவு; திருப்பூரில் 6 பேர் கைது
-
அமெரிக்க வரி விதிப்பு இனி 10 சதவீதம்
-
வார இறுதி நாளில் உயர்வை கண்டது; தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,080 அதிகரிப்பு
-
குழந்தைகளுக்கு 'ஏ' திரவம் 23ல் முகாம் தொடக்கம்
-
யாருடன் கூட்டணி? 26ல் இ.கு.க., அறிவிப்பு
-
மேல்நிலை, இடைநிலை பொதுத்தேர்வு கலெக்டர் தலைமையில் குழு அமைப்பு
Advertisement
Advertisement